Tamil Cinema News
ஜெயம் ரவி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் களம் இறங்கும் சுந்தர் சி.. மத கஜ ராஜாவால் வந்த வாய்ப்பு..!
தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படம் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட திரைப்படம். ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்தது.
இதில் விஷால், வரலெட்சுமி, அஞ்சலி, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் தற்சமயம மத கஜ ராஜா திரைப்படம்தான் பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் சுந்தர் சிக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகளும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு இயக்குனருக்கும் திரைத்துறையில் தங்களுக்கென கனவு படம் ஒன்று இருக்கும். உதாரணமாக இயக்குனர் ஷங்கருக்கு வேள்பாரி திரைப்படம் ஒரு கனவு படமாக இருந்து வருகிறது.
அதே போல இயக்குனர் சுந்தர் சியின் கனவு படமாக சங்கமித்ரா திரைப்படம் உள்ளது. இந்த படத்திற்கான கதையை எழுதி அதை படமாக்குவதற்காக காத்துக்கொண்டுள்ளார் சுந்தர் சி. ஆரம்பத்தில் இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க இருந்தது.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தற்சமயம் சங்கமித்ரா திரைப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.
சங்கமித்ரா திரைப்படம் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் அந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.அடுத்து சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்க உள்ளதால் அதற்கு அடுத்து சங்கமித்ராவை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
