Tamil Cinema News
நயன்தாரா முடிவால் சிக்கலில் சிக்கிய சுந்தர் சி… இப்படி ஆயிடுச்சே..!
நடிகை நயன்தாரா தமிழில் தற்சமயம் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஆர் ஜே பாலாஜியுடன் நயன்தாரா இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் வேல்ஸ் நிறுவனம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சுந்தர் சி இடமும் அவர்கள் பேசியிருக்கின்றனர். அவரும் படத்தை இயக்குவதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நயன்தாரா ஏப்ரல் மாதம் வரைக்கும் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதால் மூக்குத்தி அம்மன் டு2 திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
இதனால் இயக்குனர் சுந்தர் சி நடிகர் விஷாலை வைத்து அடுத்த படத்தை துவங்குவதற்கு திட்டமிட்டார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இப்பொழுது நயன்தாரா மார்ச் மாதத்திலேயே கால்ஷீட் தருவதாகவும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என்றும் இயக்குனர் சுந்தர் சி யை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதற்கு நடுவே விஷாலும் தற்சமயம் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராக இருப்பதால் யாரை வைத்து திரைப்படம் இயக்குவது என்கிற தர்ம சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார் சுந்தர் சி.
பெரும்பாலும் அவர் விஷால் படத்தைதான் அடுத்து துவங்குவார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதகஜராஜா நல்ல வெற்றியை கொடுத்திருந்தது அதனை தொடர்ந்து இன்னொரு படத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறாராம் சுந்தர் சி.
