Connect with us

உதவி இயக்குனரா இருந்துக்கிட்டு சுந்தர் சிக்கே விபூதி அடிச்ச சுராஜ்!.. காபியடிச்ச படமா அது!.

suraj sundar c

News

உதவி இயக்குனரா இருந்துக்கிட்டு சுந்தர் சிக்கே விபூதி அடிச்ச சுராஜ்!.. காபியடிச்ச படமா அது!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் சுந்தர் சி. இடையில் சுந்தர் சியை சிறப்பிக்கும் வகையில் விழா ஒன்று நடந்தது. அந்த விழாவில் இதுவரை பார்க்காத வகையில் வித்தியாசமான சுந்தர் சியை பார்க்க முடிந்தது.

மிகவும் ஜாலியாக சினிமாவில் அவருக்கு நடந்த கூத்துகளை பகிர்ந்து வந்தார். அவரிடம் பல காலங்கள் உதவி இயக்குனராக இருந்தவர்தான் சுராஜ். சுராஜ் ஒரு கதையை படமாக்குகிறேன் என்றப்போது அதை சுந்தர் சியே தயாரித்தார்.

அந்த திரைப்படம்தான் தலைநகரம். அதில் சுந்தர் சியே கதாநாயகனாக அந்த படத்தில் நடித்தார். இதுக்குறித்து சுந்தர் சி சொல்லும்போது எனக்கு போன வருடம் வரையிலுமே மலையாள படத்தின் காபிதான் தலைநகரம் என தெரியாது. டிஸ்கஸனில் இருந்தப்போது கூட சுராஜ் அதை கூறவே இல்லை.

என் அம்மா போன வருடம் தலைநகரத்தை பார்க்கும்போது இது மோகன்லால் படம்னு சொன்னாங்க. அதுக்கு பிறகுதான் நான் அந்த மோகன்லால் படத்தை சியர்ச் பண்ணி பார்த்தேன். எனக்கே அதிர்ச்சியா இருந்ததுச்சு. இதுல என்ன கொடுமைனா என்கிட்ட காப்புரிமை வாங்கி அதை தெலுங்குல வேற படமாக்குனாங்க என்கிறார் சுந்தர் சி.

To Top