க்ளைமேக்ஸை அவன்கிட்ட கொடுத்துட்டு பக்கு பக்குனு இருந்தேன்!.. உண்மையை பகிர்ந்த சுந்தர் சி..

தமிழில் முதல் படமே காமெடி படமாக இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி. அவர் இயக்கிய முறைமாமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்கள் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் வெகு காலங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு வரவேற்பு கிடைக்க துவங்கிய பிறகு இவரும் பேய் படங்களை இயக்குவதற்கு களம் இறங்கினார். அப்படி சுந்தர் சி இயக்கிய திரைப்படம்தான் அரண்மனை.

அரண்மனை திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அரண்மனை 2 திரைப்படத்தை இயக்கும்போது அதில் சாமி செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தார் சுந்தர் சி.

sundar C
sundar C
Social Media Bar

எனவே க்ளைமேக்ஸில் ஒரு அம்மன் பாடலை வைக்க முடிவு செய்தார். ஆனால் முக்கிய பிரச்சனை என்னவென்றால் அந்த படத்தில் இசையமைப்பாளராக பணிப்புரிந்தவர் ஹிப் ஹாப் ஆதி. அவர் இதுவரை தெய்வீக பாடல்களுக்கு இசையமைத்ததே கிடையாது.

ஆனாலும் அதெல்லாம் பாட்டு போட்டுவிடலாம் என தைரியமாக கூறினார். இருந்தாலும் அந்த பாடல் வரும் வரை எனக்கு பயமாகவே இருந்தது எப்படி வருமோ அந்த பாடல் என்று பயந்துக்கொண்டிருந்தேன் என்கிறார் சுந்தர் சி.