Connect with us

அந்த பாட்டை காப்பாத்த ஒரே வழி நீங்க சட்டையை கழட்டணும்!.. நடிகருக்கு சுந்தர் சி சொன்ன யோசனை!.

sundar c prasanth

News

அந்த பாட்டை காப்பாத்த ஒரே வழி நீங்க சட்டையை கழட்டணும்!.. நடிகருக்கு சுந்தர் சி சொன்ன யோசனை!.

Social Media Bar

தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. முறைமாமன் திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி தொடர்ந்து நகைச்சுவை கலந்த கதையம்சத்தை கொண்ட திரைப்படங்களை படமாக்கி வந்தார்.

இந்த நிலையில் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான மாறுப்பட்ட கதையம்சங்களை கொண்ட திரைப்படங்களையும் இயக்கினார் சுந்தர் சி. வின்னர் திரைப்படத்தின்போது தயாரிப்பாளர் மாறியதால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

க்ளைமேக்ஸிற்கு முன்பு எப்போதும் கொஞ்சம் சுறு சுறுப்பான பாடல்கள்தான் படங்களில் இருக்கும். ஆனால் வின்னர் திரைப்படத்தில் எந்தன் உயிர் தோழி என்கிற பாடல் இருக்கும். அந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே வேண்டாம், ரொமாண்டிக் பாடல் க்ளைமேக்ஸிற்கு முன்பு போட்டால் சரிவராது என கூறியுள்ளார்.

ஆனால் சுந்தர் சி அந்த பாடலையே படத்தில் வைக்க முடிவு செய்தார். முதலில் வெளிநாட்டில்தான் அந்த பாடல் படமாக்கப்பட இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் மாறிய காரணத்தால் இறுதியில் மாமல்லப்புரத்தில் ஒரு நாளில் படப்பிடிப்பை முடிக்க வேண்டி இருந்தது.

எனவே வேறு வழியில்லை. கவர்ச்சியை வைத்துதான் அந்த பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். எனவே கதாநாயகன் பிரசாந்தையும் சட்டையை கழட்ட வைத்து அந்த பாடலை எடுத்தேன் என்கிறார் சுந்தர் சி.

To Top