Cinema History
நாலு பந்தை பொறுக்கி போட்டா கத்துக்க போறோம்!.. மணிவண்ணன் எனக்கு சொல்லி கொடுத்த வித்தை!.. நினைவுகளை பகிர்ந்த சுந்தர் சி
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக பல அரசியல் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிவண்ணன். அதே சமயம் நடிகராகவும் பல வெற்றிகளை இவர் கொடுத்துள்ளார். மணிவண்ணனை பொறுத்தவரை எந்த ஒரு விஷயத்தையும் முயற்சி செய்து பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்.
முதலில் சுந்தர் சி மணிவண்ணனிடம்தான் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அப்போது மணிவண்ணனுடன் தனது நினைவுகள் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மணிவண்ணனுக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு நேரங்களில் பல சமயங்களில் அவர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பார்.

அப்படி ஒருநாள் விளையாடி கொண்டிருந்தப்போது அங்கு புதிதாக வந்திருந்த இயக்குனர் பட வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அவரை அழைத்த மணிவண்ணன் தம்பி வாங்க கிரிக்கெட் விளையாடலாம் என அழைத்துள்ளார். ஆனால் அந்த நபர் அதற்கு வர மறுத்துள்ளார்.
எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது சார் என கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த மணிவண்ணன் ட்ரைக்ஷன் மட்டும் என்ன உன் குல தொழிலா பிறக்கும்போதே ட்ரைக்ஷன் தெரிஞ்சிக்கிட்டுதான் வந்தியா என கேட்டார் அதை கேட்டவுடன் எனக்கு ஒன்று புரிந்தது.
வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்ள பார்க்க வேண்டுமே தவிர தெரியாது என விலக கூடாது. அந்த ஒரு விஷயம்தான் என் வாழ்க்கையை முன்னேற்றியது. மணிவண்ணன் எனக்கு கற்றுகொடுத்த மிக முக்கியமான விஷயமாக அதை பார்க்கிறேன் என கூறியுள்ளார் சுந்தர் சி.
