Special Articles
கதை செலக்ஷனில் அடிச்சிக்கவே முடியாது.. அருள்நிதி நடிப்பில் கண்டிப்பா பார்க்க வேண்டிய 5 படங்கள்..
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். மேலும் அந்த நடிகர்களுக்கு பல ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கும். ஆனால் ஒரு சில நடிகர்கள் தங்களுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு வரவேற்பு இல்லையென்றாலும் ஒரு சில நல்ல படங்களை கொடுப்பதன் மூலம் மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இருப்பார்கள்.
அந்த வகையில் பெரிய அளவு ரசிகர் கூட்டங்கள் இல்லை என்றாலும், தான் நடிக்கும் படங்களின் மூலம் அதிக வரவேற்பு பெற்று இருக்கும் நடிகர் என்றால் அது அருள்நிதி தான். தற்போது அருள்நிதி நடித்த படங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகர் அருள்நிதி
அருள்நிதி தமிழ் திரைப்பட நடிகராவார். மேலும் இயக்குனர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர் சினிமா மட்டுமில்லாமல் பிரபல அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த ஒரு நபர் ஆவார். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனார். ஆனாலும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அருள்நிதி தனக்கான சில வரைமுறைகளை வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர் ஆவார்.
அரசியலில் சில வரைமுறைகளை வைத்துக்கொண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்வம் செலுத்தி வரும் அருள்நிதி, எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார்.
அதுபோல சினிமாவிலும் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் அதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார் நடிகர் அருள்நிதி. தன்னுடைய சினிமா வாழ்க்கையில் குறைந்த அளவு படங்களில் மட்டும் நடித்துயிருக்கும் அருள்நிதி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்களை பற்றி பார்க்கலாம்.
டைரி

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் அருள்நிதி நடிக்க உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் பேனரின் கீழ் இந்த படத்தை விநியோகித்தார். இந்தப் படத்தில் எஸ்.ஐ பயிற்சி முடித்துவிட்டு போலீஸ் அதிகாரியாக அருள்நிதி வருகிறார். இதில் பல வருடங்களாக பிடிபடாமல் இருக்கும் கொள்ளை கும்பலை பற்றிய வழக்கை கையில் எடுக்கிறார்.
இந்நிலையில் ஒரு பேருந்தில் பலவித முகங்கள் பலவித பின்னணி கதைகளுடன் அந்த பேருந்தில் பயணித்து வருகின்றனர். ஹாரர் திரில்லர் படமான இப்படத்தில் 13வது ஹேர்பிண் பெண்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த 3 கதைகளும் எப்படி ஒரே இடத்தில் சேருகின்றன என்பது தான் இந்த படத்தின் கதை ஆகும்.
டிமான்டி காலனி 2

டிமான்டி காலனி ஒன்று திரைப்படத்தில் ஒரு வீட்டின் பிரபல ஆங்கிலேரியின் செயினை எடுத்துக் கொண்டு நண்பர்கள் வந்த பிறகு ஏற்படும் நிகழ்வுகளை திர்லராக எடுத்திருந்த இயக்குனர், அந்த வீட்டிலிருந்து தப்பிக்கும் போது அருள்நிதி உயிரிழப்பதாக காண்பித்திருப்பார். இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் அவர் கோமா நிலையில் சிகிச்சையில் இருப்பது போன்றும், சகோதரர் அதாவது இன்னொரு அருள்நிதி தந்தையின் சொத்து தனக்கு மட்டும் வர வேண்டும் என்று முயற்சிக்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய கணவரின் மரணத்தில் மர்மம் இருக்கும் என நினைக்கும் பிரியா பவானி சங்கர், அதை புத்த துறவி உதவியுடன் கண்டுபிடிப்பதற்காக களம் இறங்குகிறார். இந்த மூவரின் கதையும் ஒரு புள்ளியில் இணைகிறது. மேலும் இவர்களின் உயிரை பறிக்க நினைக்கும் டிமான்டி பேயை பற்றி தெரிய வருகிறது. மேலும் அதை தடுக்க அருள்நிதியும், பிரியா பவானிசங்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை.
இரவுக்கு ஆயிரம் கண்கள்

இந்த திரைப்படத்தில் அருள்நிதி அஜ்மல் அமீர், மஹிமா நம்பியார் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். படத்தின் தொடக்கத்தில் ஒரு பங்களா வீட்டில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடக்கிறார். அவரின் கொலைக்கு கால் டாக்ஸி டிரைவரான கதாநாயகன் தான் காரணம் என போலீசார் சந்தேகப்பட்டு அவரை கைது செய்கிறார்கள்.
இந்நிலையில் அப்பாவியான அந்த கதாநாயகன் போலீஸாரிடம் இருந்து தப்பித்து ஓடி நிஜக் கொலையாளியை தேடி ஓடுகிறான் மேலும் கொள்ளை செய்தது யார்? உண்மையான கொலையாளியை கதாநாயகன் கண்டுபிடித்து விட்டானா என்பது தான் படத்தின் கதை.
டிமான்டி காலனி 1

தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு பேய் படத்தை காட்டியது டிமான்டி காலனி 1. இந்த படத்தில் நான்கு நண்பர்கள் ஒரு அறையில் தங்கியிருக்கிறார்கள். ஒரு ஆங்கிலேயர் வாழ்ந்த வீட்டிற்குள் சென்று அங்கு மர்மமான விஷயங்களை தேடி செல்கிறார்கள். அப்போது அங்கிருந்து அவரின் செயின் ஒன்றை அவரின் நண்பர் எடுத்து வர அதன் பிறகு அவரின் நண்பர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். அந்த டிமான்டி பேய் எவ்வாறு அதனுடைய செயினை மீண்டும் அந்த பங்களாவிற்குள் கொண்டு செல்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை
மௌனகுரு

கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி, இனியா, ஜான் விஜய், உமா ரியாஸ்கான் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மௌனகுரு. அறிமுக இயக்குனர் சாந்தகுமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகன் அருள்நிதி அப்பாவியான இளைஞனாக தன்னுடைய வீட்டை விட்டு வலுக்கட்டையமாக வெளியேற்றப்படுகிறார்.
அதிரடி த்ரில்லர் படமான இப்படத்தில் நடிகர் அருள்நிதி தனது வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்து கருணாகரன் என்ற ஒரு கலகம் கொண்ட இளைஞனாக நடித்திருக்கிறார். தெரியாமல் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொள்ளும் அருள்நிதி அதன் பிறகு அவர் சந்திக்கும் சம்பவங்கள் படத்தின் கதையாக இருக்கிறது.
