News
விருமன் மாதிரி எனக்கும் ஒரு படம் வேணும் – முத்தையாவிடம் சென்ற சூர்யா
தமிழகத்தில் அழுக்கு வேட்டி ஹீரோக்கள் என கூறினாலே அடுத்து நினைவிற்கு வரும் ஒரு இயக்குனராக முத்தையா இருக்கிறார்.
இவர் எடுக்கும் திரைப்படங்கள் பெரிதான வசூல் சாதனை படைக்கவில்லை என்றாலும் கூட எப்போதும் போதுமான அளவில் ஓடிவிடும்.

மேலும் குறைந்த தயாரிப்பு செலவிலேயே முத்தையா திரைப்படங்களை இயக்கிவிடுவார். தற்சமயம் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து முத்தையா இயக்கி வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார்.
விருமன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் இதுவரை 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் நடிகர் கார்த்திக்கும் இது ஒரு சிறப்பான படமாக அமைந்துவிட்டது. அதே சமயம் நடிகர் சூர்யாவிற்கு இடையில் வெளியான எதிர்க்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை தரவில்லை. இதனால் அடுத்த படத்திற்கு இயக்குனர் முத்தையாவுடன் இணையலாம் என முடிவெடுத்துள்ளாராம் சூர்யா.
ஏற்கனவே சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதற்கு அடுத்ததாக முத்தையாவுடன் கூட்டணி சேரலாம் என முடிவெடுத்துள்ளாராம். எனவே முத்தையாவும் சூர்யாவிற்காக கதை எழுதி வருகிறார் என கூறப்படுகிறது.
