ப்ரோமோஷனே இந்த லெவலா? –  ஒரு மாதத்திற்கு தயாராகும் பொன்னியின் செல்வன் அணி

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்ர்ப்போடு வெளியாக இருக்கும் ஒரு திரைப்படம் பொன்னியின் செல்வன். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் எடுக்க வேண்டும் என நினைத்தும் பல இயக்குனர்களால் படமாக்கப்படாமல் கனவு படமாகவே இருந்த பொன்னியின் செல்வன் தற்சமயம் இயக்குனர் மணிரத்னத்தின் கை வண்ணத்தில் நனவானது என கூறலாம்.

இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் இன்னும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். படம் அடுத்த மாதம் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பேன் இந்தியா படமாக வெளியாக இருப்பதால் படத்திற்கு பெரும் ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் மணி ரத்னம்.

செப்டம்பர் 1 முதலே இந்தியா முழுவதும் சென்று ப்ரோமோஷன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். எனவே ஒரு மாத கால் ஷூட்களை ஒதுக்கி வைத்துவிட்டு முக்கிய நடிகர்கள் அனைவரும் ப்ரோமோஷனுக்கு வர வேண்டும் என கூறியுள்ளாராம் மணிரத்னம்.

முக்கிய நடிகர்கள் அனைவரிடமும் ஏற்கனவே இதுக்குறித்து பேசியுள்ளதாகவும், இன்னும் விக்ரமிடம் மட்டும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. 

கண்டிப்பாக தஞ்சாவூருக்கு இந்த அணி வரும் என எதிரப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராஜ ராஜ சோழனின் பெரிய கோவிலே தஞ்சையில்தான் உள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் கதையும் கூட தஞ்சையில்தான் துவங்குகிறது. எனவே இவர்கள் படத்தை பிரபலப்படுத்த முக்கிய இடமாக தஞ்சை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh