நல்லது செஞ்சது ஒரு தப்பா –  வெளியீட்டாளர்களுக்கு எதிராக உதயநிதி

சினிமா வட்டாரத்தை பொறுத்தவரை அதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தயாரிப்பாளர்களே. திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் சினிமாவில் முன்னுரிமை உண்டு என கூறலாம். திரைப்படங்களை வெளியிடுவதை பொறுத்தவரை பல நிருவனங்கள் வெளியீட்டிற்கு என இருக்கின்றன.

இவை திரைப்படம் முடிவடைந்தவுடன் அதை வெளியிடும் உரிமையை பெற்றுக்கொள்கின்றன. படம் வெளியாகி வரும் வசூல் சாதனை சரியாக கணக்கிட்டு தயாரிப்பாளரிடம் வழங்குவது இவற்றின் வேலை.

தற்சமயம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதிகமான திரைப்படங்களை வெளியிடும் உரிமையை பெற்று வெளியிட்டு வருவதை பார்க்கலாம். தயாரிப்பாளர்கள் பலருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் லாபகரமான அளவில் பங்குகள் அளிப்பதால் அவர்களே முன் வந்து திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழியாக வெளியிடுவதாக கூறப்படுகிறது.

ஆனால் பொது மக்கள் பேசும்போது ஆட்சியில் அவர்கள் அரசு இருக்கும் காரணத்தால் உதயநிதியே அதிகமான திரைப்படங்களுக்கான வெளியீட்டு உரிமையை பெற்றுக்கொள்கிறார் என பேச்சுக்கள் உள்ளன.

இதனால் சிக்கலில் உள்ள உதயநிதி இனி அதிக படங்களை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.

Refresh