Connect with us

தென்னிந்தியாவை தெறிக்க விடும் கூட்டணி… 46 ஆவது படம் குறித்து அப்டேட் கொடுத்த சூர்யா.!

Tamil Cinema News

தென்னிந்தியாவை தெறிக்க விடும் கூட்டணி… 46 ஆவது படம் குறித்து அப்டேட் கொடுத்த சூர்யா.!

Social Media Bar

தொடர்ந்து நிறைய தோல்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான காரணத்தால் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் ரெட்ரோ.

இந்த திரைப்படம் 1 ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். பெரும்பாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

திரைப்படங்களின் கதை அம்சங்களிலும் கூட கார்த்திக் சுப்புராஜ் அதிகமாக வேலை பார்த்திருப்பார். அந்த வகையில் நடிகர் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படம் தனித்துவமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் குறித்து சூர்யா பேசும்போது தனது 46 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்டை கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது தனது 46 ஆவது திரைப்படத்தை லக்கி பாஸ்கர் திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

லக்கி பாஸ்கர் என்ன மாதிரியான வெற்றியை கொடுத்தது என்பது பலரும் அறிந்த விஷயமே. எனவே கண்டிப்பாக சூர்யாவுக்கு இந்த படம் முக்கிய படமாக அமையும் என கருத்துக்கள் இருந்து வருகின்றன.

To Top