சூர்யாவுடன் பிரியாணி கிண்டிய மம்முட்டி – வைரலாகும் புகைப்படங்கள்

நடிப்பது தயாரிப்பு சார்ந்த விஷயங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகர் சூர்யா. பல படங்களை தயாரித்து வருபவர் சூர்யா. ஜெய் பீம், விருமன் போன்ற படங்களை சூர்யாவே தயாரித்தார்.

இதற்காக 2டி எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்சமயம் இவர் மம்முட்டி நடிக்கு காதல் –  த கோர் என்கிற படத்தை தயாரித்து வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்நிலையில் படத்தில் பணிபுரிவோருக்கு பிரியாணி போடலாம் என யோசித்த சூர்யா பிரியாணி செய்துள்ளார்.

கூடவே நடிகர் மம்முட்டியும் நின்று இருவருமாக சேர்ந்து பிரியாணி செய்துள்ளனர். இந்த போட்டோக்கள் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

Refresh