Tag Archives: எஸ்.ஜே சூர்யா

அட்லிக்கு விஜய் என்ன செஞ்சாரோ அதைதான் அஜித் மார்க் ஆண்டனி இயக்குனருக்கு செஞ்சாரு!.. ஒப்பன் டாக் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழில் சில சமயங்களில் சில திரைப்படங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பெரும் வெற்றியை கொடுக்கும். அப்படி தற்சமயம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த படம் மார்க் ஆண்டனி.

திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே அந்த திரைப்படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு எதுவும் இருக்கவில்லை. ஆனால் படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது பலருக்கும் வரவேற்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து படம் வெளியான ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியது. இந்த படம் தற்சமயம் பெரும் வெற்றியை கண்டுள்ளது. கிட்டத்தட்ட 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் குறித்து எஸ் ஜே சூர்யா பேசும்பொழுது ஒரு விஷயத்தை கூறியிருந்தார். சில பெரும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தருவதுண்டு. அப்படி நடந்த விஷயம்தான் இந்த மார்க் ஆண்டனி படமும் கிட்டத்தட்ட ஜவான் திரைப்படத்திலும் இதே விஷயம் நடந்துள்ளது.

ஜவான் திரைப்படத்தின் கதையை முதன் முதலாக விஜய்யிடம் தான் கூறினார் அட்லீ. அந்த கதையை கேட்ட விஜய் இந்த கதை பாலிவுட்டிற்கு நன்றாக செட்டாகும், எனவே இதை ஷாருக்கானிடம் சென்று சொல் என்று அறிவுரை கூறியுள்ளார். அதன்படி அட்லீயும் ஷாருக்கானிடம் கூறியுள்ளார்.

அதேபோல மார்க் ஆண்டனியின் கதையை முதலில் ஆதித் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்திடம்தான் சென்று கூறியுள்ளார். அதைக் கேட்ட அஜித் இந்த கதை விஷாலுக்கு சரியாக இருக்கும் எனவே அவரிடம் இந்த கதையை கூறு என்று விஷாலிடம் அவரை அனுப்பி வைத்துள்ளார். இந்த விஷயத்தை எஸ்.ஜே சூர்யா அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

12 பேர் அன்னைக்கு செத்துருக்க வேண்டியது!.. மார்க் ஆண்டனி படத்தில் நடந்த விபத்து!.

எஸ்.ஜே சூர்யா தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். ஒரு காலத்தில் பெரும் இயக்குனராக இருந்த எஸ்.ஜே சூர்யா நடிகரான பிறகும் கூட நியூ, அன்பே ஆருயிரே என இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தால் பெரும் வீழ்ச்சியை சந்தித்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி திரைப்படம் இவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது.

அதன் பிறகு அடுத்து ஒரு டர்னிங் பாயிண்டாக ஸ்பைடர் திரைப்படம் அமைந்தது. தற்சமயம் அவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றியை கண்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.

இவர் ஒரு பேட்டியில் கூறும்போது க்ளைமேக்ஸ் காட்சிக்காக ஒரு லாரியை ஏற்பாடு செய்திருந்தோம். நானும் விஷாலும் நிற்போம் எங்களுக்கு எதிரே லாரி சுவற்றை உடைத்துக்கொண்டு வர வேண்டும். அதே போல லாரியும் வந்தது. ஆனால் அந்த ட்ரைவர் ப்ரேக்கை அழுத்தாமல் மறந்து ஆக்ஸலரேட்டரை அழுத்திவிட்டான்.

அதனையடுத்து லாரி வேகமாக என்னையும் விஷாலையும் நோக்கி வந்தது. ஆனால் ட்ரைவர் லாவகமாக லாரியை வலதுப்பக்கம் திருப்பினார். ஆனால் வலதுப்பக்கமும் ஆட்கள் நின்றனர். விபத்து நடந்தது. எப்படியும் ஒரு 12 பேராவது காலி என நான் நினைத்தேன்.

ஆனால் நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை என கூறியுள்ளார் எஸ்.ஜே சூர்யா.

அந்த ரஜினி இயக்குனர் இல்லைனா இப்ப இந்த வாழ்க்கை இல்லை!.. மனம் உருகிய எஸ்.ஜே சூர்யா!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக ட்ரெண்ட் ஆகி வரும் நடிகராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். தமிழில் முதன் முதலாக ஆசை படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார் எஸ்.ஜே சூர்யா. அதன் பிறகு வாலி, குஷி என இரு ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கினார்.

தற்சமயம் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வரும் எஸ்.ஜே சூர்யா ஒரு பேட்டியில் கூறும்போது நியு, அன்பே ஆருயிரே இரண்டு திரைப்படங்களும் எனக்கு மெஹா ஹிட் கொடுத்த திரைப்படங்கள் ஆகும். அந்த இரு திரைப்படங்களுமே கோடிகளில் வருவாய் அளித்தது.

அவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த நான் எப்படி இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் அதற்கு பிறகு தொடர்ந்து தோல்விகளை சந்தித்தேன். பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் என்னை மீண்டும் சினிமாவிற்குள் கொண்டு வந்தார்.

அவர் இயக்கிய இறைவி திரைப்படம் எனக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதற்கு பிறகு எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது. எனவே இதற்காக அவருக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன்.

அவன் படம் சரிவராதுன்னு கதையை நான் மாத்துனேன்!.. மார்க் ஆண்டனி குறித்து எஸ்.ஜே சூர்யா…

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. முதன்முதலாக தமிழ் சினிமாவில் இயக்குனராகத்தான் அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா. அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார்.

குஷி திரைப்படத்திற்கு பிறகு எஸ்.ஜே சூர்யா அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி அவர் கதாநாயகனாக நடித்து வெளியான நியூ திரைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

அதன் பிறகு ஒரு சில படங்கள் அவரே நடித்து இயக்கினார்.ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்தது மூலமாக ஒரு நடிகராக அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து வரிசையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். மாநாடு படம் அவருக்கு இன்னொரு மைல் கல்லாக அமைந்தது.

தற்சமயம் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முதலில் என்னிடம் கதையை கூறும் பொழுது அது சரியாக இல்லை. இதே போன்ற கதைகளை எடுத்து நான் நிறைய அடி வாங்கி இருக்கிறேன்.

எனவே நீ இப்படியான கதைகளை இனி எடுக்காதே உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எனவே புதிய கதையை மாற்றி எடு என அறிவுரை கூறினேன் அதற்கு பிறகு தான் மார்க் ஆண்டனி கதையை அவர் எழுதினார் என தனது பேட்டியில் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

எங்க கோத்து விட்டுருக்க பாரு.. தேவாவுக்கு எஸ்.ஜே சூர்யா செய்த சம்பவம்!..

தேனிசை தென்றல் என தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. முதன் முதலாக நாட்டுப்புற இசையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அதற்கு ஒரு அங்கீகாரத்தையும் பெற்று தந்தவர் தேவா.

இசையமைப்பாளர் என்பதை தாண்டி பாடகராகவும் இவர் மிக பிரபலமானவர். இவர் இசையமைத்த பல பாடல்களை இவரே பாடியுள்ளார். எஸ்.ஜே சூர்யா முதன் முதலாக இயக்கிய வாலி திரைப்படத்திற்கும் சரி அதற்கு பிறகு வந்த குஷி திரைப்படத்திற்கும் சரி தேவாதான் இசையமைத்தார்.

இரண்டு படங்களிளுமே பாடல்கள் பெரும் வெற்றி கண்டது தேவாவால்தான். தேவா ஒரு பேட்டியில் பேசும்போது எஸ்.ஜே சூர்யா எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் என தேவா குறித்து பேசியிருந்தார். எந்த அளவிற்கு வெளிப்படை என்றால் ஒருமுறை தேவாவிற்கே பயம் காட்டி உள்ளார்.

ஏ சோனா என்கிற பாடலுக்கான இசையை அமைக்கும்போது எதார்த்தமாக அதை பாடிக்கொண்டே இசையமைத்துள்ளார் தேவா. அதற்கு பிறகு அந்த பாடலை பாடுவதற்காக பாடகர் ஹரிஹரன் வந்தார். அப்போது எஸ்.ஜே சூர்யா தேவாவை பாட சொல்லிவிட்டு அதே போல பாடுங்கள் சார் என ஹரிஹரனிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டு தேவா அதிர்ச்சியாகிவிட்டார். ஹரிஹரன் எவ்வளவு பெரிய பாடகர் அவரை போய் என்னை பார்த்து பாட சொல்றீங்களே என பதறிவிட்டார். இதை அந்த பேட்டியில் தேவா பகிர்ந்திருந்தார்.

சரக்கு க்ளாஸை கழுவுனியா இல்லையா!.. உதவி இயக்குனரை ஓடவிட்ட எஸ்.ஜே சூர்யா…

தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகர்களில் எஸ்.ஜே சூர்யா முக்கிய இடத்தை பிடித்து வருகிறார். அதுவும் மாநாடு, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்சமயம் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் அவரது கதாபாத்திரத்தை வெகுவாக கொண்டாடுகின்றனர் மக்கள். மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா மது அருந்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தப்போது நடந்த சம்பவம் ஒன்றை இயக்குனர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

அந்த காட்சிக்காக புது க்ளாஸ் வாங்கியிருந்தனர். உதவி இயக்குனர் அதை எஸ்.ஜே சூர்யாவிடம் கொண்டு போய் வைத்தனர். அதை பார்த்த எஸ்.ஜே சூர்யா இந்த க்ளாஸை கழுவுனியா இல்லையா என கேட்டுள்ளார். அதற்கு உதவி இயக்குனர் சார் இது புது க்ளாஸ் சார் என கூறியுள்ளார்.

அதை கேட்டு கடுப்பான எஸ்.ஜே சூர்யா அப்ப இதை நீ கழுவலையா என கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த உதவி இயக்குனர் சமாளிப்பதற்காக கழுவுன க்ளாஸ்தான் சார் என கூறியுள்ளார். அப்புடினா இது புது க்ளாஸ் இல்லையா என எஸ்.ஜே சூர்யா கேட்க அதற்கு பிறகு அந்த உதவி இயக்குனர் எஸ்.ஜே சூர்யா பக்கமே வரவில்லையாம்.

நாலு வருஷத்தில் தலைவர் எடுத்த முடிவுதான் எல்லாத்துக்கும் காரணம்.. விளக்கம் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு எப்போதுமே ஒரு தனி ரசிக பட்டாளம் உண்டு. ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு இதனால் இப்போது வரை பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ரஜினிகாந்திற்கும் தோல்வி படங்கள் உண்டு, அதில் மிக முக்கியமான திரைப்படம் பாபா 2002 இல் வெளியான பாபா திரைப்படம் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் இந்த படத்தையும் இயக்கினார் என்றாலும் இதன் கதை ரஜினிகாந்தோடது ஆகும். இந்த நிலையில் அதற்கு அடுத்து ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடம் ஓடி பயங்கர ஹிட் கொடுத்தது.

இத்தனைக்கும் சந்திரமுகி திரைப்படத்தில் படம் முழுக்க ரஜினி மட்டுமே வரம்மாட்டார். பல முக்கியமான கதாபாத்திரங்கள் அதில் இருப்பார்கள். அதில் ரஜினிகாந்தும் இருப்பார். அப்படியும் படம் பெரும் ஹிட் கொடுத்தது.

இதுக்குறித்து எஸ்.ஜே சூர்யா ஒரு பேட்டியில் கூறும்போது பாபா படத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் தலைவர் இடைவெளி எடுத்துக்கொண்டார். அந்த நாட்களில் அவர் செய்த தவறை சரி செய்து அடுத்து ஒரு படம் என வரும்போது அதில் வேற லெவல் நடிப்பை கொடுத்து ஹிட் கொடுத்துவிட்டார். அவர்தான் ரஜினிகாந்த் என கூறியுள்ளார்.

இத்தனை டபுள் மீனிங் டயலாக்கா!.. மார்க் ஆண்டனி படத்தில் தடை செய்யப்பட்ட வசனங்கள்..

தற்சமயம் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்று படம் சென்சார் சான்றிதழை வாங்குவதற்காக தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு படத்தில் 13 இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கூறியுள்ளனர்.

அவை:

  • மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு என படத்தின் துவக்கத்தில் போடும் வசனத்தில் எழுத்தை பெரிதாக்க வேண்டும்.
  • படத்தில் வரும் கொ$#ல, போன்ற கெட்ட வார்த்தைகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பொட்டை, நாதாரி போன்ற வார்த்தைகளை சேர்க்கலாம்.
  • ஒன்பதால் க்ளாஸ்ல இருந்து என்கிற வசனத்தை நீக்க வேண்டும்.
  • இலங்கையில் இருக்க நம்ம தமிழ் மக்களுக்கு” என்னும் வசனத்தை நீக்க வேண்டும்.
  • பாடல்களில் வரும் இரட்டை வசனங்கள்,
  • எத்தனை ஆண்டிஸ் என்னை கூப்ட்டுருக்காங்க, ஆண்டனியை எப்ப வேணா போடலாம், முதல்ல சிலுக்க போடுவோம். ஆண்டனியையும் போட முடியல, சிலுக்கையும் போட முடியல இப்படி பல இரட்டை வார்த்தை வசனங்களை தணிக்கை குழு நீக்குமாறு கூறியுள்ளது.

முதல் நாளே அவமானத்தைதான் சந்தித்தார் எஸ்.ஜே சூர்யா!.. எல்லாம் நம்ம அஜித்தான்..

தமிழ் சினிமாவில் அஜித் விஜய்யை மட்டும் வைத்து படம் இயக்கிய ஒரே இயக்குனர் எஸ்.ஜே சூர்யா என கூறலாம். தனது முதல் படமே அஜித்தை வைத்து இயக்கினார் எஸ்.ஜே சூர்யா.

ஆனால் அதற்கு முன்னர் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அந்த சமயத்தில்தான் வசந்த் ஆசை என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் அஜித்தான் கதாநாயகனாக நடித்தார். எனவே அந்த வழியில் எஸ்.ஜே சூர்யாவிற்கும், அஜித்திற்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது.

அப்போதே வாலி படத்தின் கதையை எழுதி வைத்திருந்தார் எஸ்.ஜே சூர்யா. அந்த கதை அஜித்திற்கு பிடிக்கவே அவரே இந்த கதையில் நடிக்கிறேன் என்றார். இந்த நிலையில் வாலி படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பின்போது எஸ்.ஜே சூர்யா கேமிரா ஆங்கிள்களே சரியாக வைக்கவில்லையாம்.

இதை பார்த்த அஜித் கேமிராவையே ஒழுங்காக பிடிக்க தெரியவில்லை இவர் எப்படி படம் எடுக்க போகிறார் என கூறியுள்ளார். இதை கேட்ட எஸ்.ஜே சூர்யா அன்றே வீட்டிற்கு சென்று நிறைய ஹாலிவுட் படங்களை வாங்கி கேமிரா ஆங்கிள் அவற்றில் எப்படி உள்ளன என பார்த்துள்ளார்.

அப்படியெல்லாம் பார்த்து அவர் எடுத்த வாலி திரைப்படம் பெறும் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாருக்கும் வண்டி வாங்கி தர போறேன்!.. அஜித்தை தாண்டி மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா

தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா. சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் எஸ்.ஜே சூர்யா.

தமிழ் சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்திலேயே கதாநாயகன் ஆக வேண்டும் என்பதே எஸ்.ஜே சூர்யாவின் ஆசையாக இருந்தது. ஆனால் எடுத்த உடனே கதாநாயகன் ஆக முடியாது என்பதால் முதலில் இயக்குனர் ஆக முடிவு செய்தார்.

அவரது முதல் படமான வாலி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. நடிகர் அஜித்திற்கும் அது முக்கியமான படமாக அமைந்தது. வாலி படம் முதல் படம் என்பதால் அதற்கு குறைவான சம்பளத்தையே பெற்றார் எஸ்.ஜே சூர்யா.

ஆனால் அதற்கு பிறகு விஜய் நடிக்கும் குஷி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யாவிற்கு பெரும் தொகையை முன்பணமாக கொடுத்தனர்.

முதல் முறையாக அப்போதுதான் பெரும் தொகையை சம்பளமாக வாங்கினார் எஸ்.ஜே சூர்யா. ஆனால் அந்த தொகையை அப்படியே ஒரு பைக் ஷோருமீல் கொடுத்து தன்னுடன் பணிப்புரிந்த 7 உதவி இயக்குனர்களுக்கும் பைக் வாங்கி கொடுத்தார் எஸ்.ஜே சூர்யா.

அப்போது எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் மாரிமுத்து இந்த தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

புது ஆக்டர்ஸ் காம்போவில் இறங்கும் தனுஷ்!.. தனுஷ் 50 படத்தின் ஃபுல் அப்டேட் வெளியானது…

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். இயக்குனரின் மகன் என்றாலும் ஆரம்பத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் திருடா திருடி,காதல் கொண்டேன் போன்ற திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன.

அதன் பிறகு தனுஷின் சினிமா வாழ்க்கை இயக்குனர் வெற்றி மாறனால் பெரும் மாற்றத்தை கண்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதனை தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டார் தனுஷ்.

ஹாலிவுட், பாலிவுட் என பல இடங்களிலும் தனது நடிப்பு திறனை காட்டியுள்ளார். தற்சமயம் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50 ஆவது படத்தை நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்க இருக்கிறார்.

தற்சமயம் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன. படக்கதைப்படி மூன்று சகோதரர்களிடையே நடக்கும் விஷயங்களை வைத்து படம் செல்லும் என கூறப்படுகிறது. அதில் தனுஷும்  ஒருவராக இருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சூரரை போற்று, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை துஷாரா விஜயன் தனுஷிற்கு தங்கையாக நடிக்கிறார். சந்தீப் கிஷன் தனுஷ் சகோதரராக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வருகிற ஜூலையில் படப்பிடிப்பை துவங்கி மூன்று மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க உள்ளனர். ஜூலையில் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

எங்க கோத்து விட பாக்குற.. எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து நேக்காக எஸ்கேப் ஆன ஏ.ஆர் ரகுமான்..!

1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். அதுவரை தமிழ் சினிமாவில் எம்.எஸ் வி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் பெரும் உச்சத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரில் இருந்து முழுதாக வேறுப்பட்ட மாடர்ன் இசையை எடுத்துக்கொண்டு வந்தார் ஏ.ஆர் ரகுமான். எனவே சினிமாவிற்கு வந்த உடனேயே அவர் அதிகமான வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து இளையராஜாவிற்கு போட்டியாக ஒரு இசையமைப்பாளர் உருவாகிவிட்டார் என திரையுலகமே பேச துவங்கியது.

இதனால் இளையராஜாவிற்கும் ஏ.ஆர் ரகுமானுக்கும் இடையே போட்டி உண்டானதாக பேச்சுக்கள் உண்டு. மணிரத்னம் இளையராஜாவை அவமதித்ததாலேயே அவர் ஏ.ஆர் ரகுமானை இசையமைப்பாளர் ஆக்கினார் என பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் இந்த கதையையே அடிப்படையாக கொண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கிய திரைப்படம்தான் இசை. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமானே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார் எஸ்.ஜே சூர்யா. ஆனால் ஏ.ஆர் ரகுமான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த படத்திற்கு ஏன் நீங்களே இசையமைக்க கூடாது என எஸ்.ஜே சூர்யாவை உசுப்பிவிட்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

அதன் முடிவாய் இறுதியில் அந்த படத்திற்கு எஸ்.ஜே சூர்யாதான் இசையமைத்தார். இதுக்குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது அவர் கதையையே படமாக எடுத்துவிட்டு அவரையே இசையமைக்க அழைத்தால் எப்படி வருவார் என நகைச்சுவையாக கேட்டுள்ளார்.