Tag Archives: எஸ்.ஜே சூர்யா

அந்த சீன்ல கோபம் கொடூரமா இருக்கணும்… நெஜமாகவே வெறி ஏத்திய லாரன்ஸ்!.. ட்ரிக் தெரிஞ்ச மனுஷன்!..

Raghava lawarance: சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து பிறகு டான்ஸ் மாஸ்டரானவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு கதாநாயகனாக ஆசைப்பட்ட லாரன்ஸ் அற்புதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கிய லாரன்ஸ் ஒரு கட்டத்தில் படத்தை இயக்க துவங்கினார். அவர் இயக்கிய முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கண்டன. தற்சமயம் முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகராக லாரன்ஸ் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் லாரன்ஸ் நடித்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அதில் சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கடுத்து வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான படமாக வந்தது.

இந்த படம் குறித்து அவர் தன் பேட்டியில் கூறும்போது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மிகவும் கோபமாக இருக்க வேண்டும் என கூறியிருந்தனர். எப்போதுமே லாரன்ஸ் மூன்று வேளை சாப்பாட்டை நேரத்திற்கு சாப்பிட கூடியவர். அவருக்கு சாப்பாடு காலதாமதம் ஆனால் மிகவும் கோபம் வருமாம்.

எனவே அந்த காட்சியின் போது சாப்பிடாமல் நின்று படப்பிடிப்பில் நடித்துள்ளார் லாரன்ஸ். முக்கியமாக அதற்கு முந்தைய காட்சியில் எஸ்.ஜே சூர்யா நடிக்க வேண்டி இருந்ததாம். அப்போது அவரிடம் லாரன்ஸ் முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணுங்க என கூறியுள்ளார்.

படப்பிடிப்பை முடித்து வந்த எஸ்.ஜே சூர்யா சிறப்பா பண்ணியிருக்கேன் என கூறியுள்ளார். அப்படியென்றால் அவரை விட நாம் சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற பயத்திலேயே அந்த படப்பிடிப்பில் சாப்பிடாமல் நடித்துள்ளார் லாரன்ஸ்.

ஜிகர்தண்டா மூணாவது பார்ட் வருமா!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் சுப்புராஜ்!.

தீபாவளியை முன்னிட்டு தமிழில் இரண்டு படங்கள் வெளியாகின. அதில் முக்கியமான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜப்பான் திரைப்படத்தையும் விட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு வரவேற்புகள் அதிகமாக இருந்தன.

பழங்குடி இன மக்கள் மத்தியில் அரசு நிகழ்த்தும் அதிகார மீறல்களை காட்டும் அதே வேளையில் ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கான விஷயங்களையும் இதில் சேர்த்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இதனால் இந்த படம் அதிகமான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படம் முடியும்போது ஜிகர்தண்டாவின் அடுத்த பாகமான ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸிற்கான தொடக்கத்தை வைத்து படத்தை முடித்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிலையில் ஜிகர்தண்டா படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகுமா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

இதுக்குறித்து தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸிற்கு இன்னமும் கதை கூட எழுதவில்லை. ஆனால் அப்படி ஒரு படம் எடுக்க ஆசை இருக்கிறது. ஆனால் பல வருடங்கள் கழித்தே அடுத்த பாகத்தை எடுப்பேன். எனவே இப்போது யாரும் அதை எதிர்பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. நான்ஸ்டாப் எண்டர்டெயின்மெண்ட் –  பட விமர்சனம்!..

ஒரு சினிமா என்பது பலருக்கு பொழுது போக்காக இருக்கும். சிலருக்கு அதுவே வாழ்க்கையாக இருக்கும். ஆனால் வரலாற்றில் பல நாட்டின் அரசியலையே புரட்டி போட்டிருக்கிறது சினிமா. தமிழகத்தில் துவங்கி அமெரிக்காவரை சினிமா அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் அதிகமானவை.

அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

படக்கதை:

படத்தின் கதைப்படி எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு கதாபாத்திரமாக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். படம் 1973 காலக்கட்டத்தில் நடக்கிறது. போலீஸாக வேண்டும் எனும் ஆசையில் இருக்கும் எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த பயம் ஒரு தடையாக இருக்கிறது.

இந்த நிலையில் எஸ்.ஐ ஆக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவின் மேல் ஒரு கொலை பழி விழுகிறது. 4 பேரை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் எஸ்.ஜே சூர்யா. இந்த நிலையில் பெரும் புகழ் கொண்ட நடிகர் ஒருவர் முதலைமைச்சர் ஆக திட்டமிடுகிறார்.

அதற்கு தடையாக ஆலிஸ் சீசர் (லாரன்ஸ்) என்னும் பழங்குடி இன ரவுடி ஒருவன் இருக்கிறான். அவனை தீர்த்து கட்டுவதற்காக ஆள் தேடும்போது அவருக்கு எஸ்.ஜே சூர்யா அறிமுகமாகிறார். ஏற்கனவே போலீஸ் வேலையை இழந்த எஸ்.ஜே சூர்யா இந்த விஷயத்தை செய்ய ஒப்பு கொள்கிறார்.

ஆலிஸ் சீசருக்கு சினிமாவின் மீது அதிக ஈடுபாடு உண்டு. எனவே தன்னை ஒரு இயக்குனராக அறிமுகம் செய்துக்கொண்டு அவரிடம் செல்லும் எஸ்.ஜே சூர்யா அவரை எப்படி தீர்த்துக்கட்ட போகிறார் என்பதே கதை.

விமர்சனம்:

விறுவிறுப்பான கதைக்களத்தில் சுறுசுறுப்பான கதை ஓட்டத்தை கொண்டு திரைப்படம் செல்கிறது. உலக சினிமா தொடர்பாக ஏகப்பட்ட விஷயங்களை கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தில் வைத்துள்ளார்.

உதாரணத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகரான க்ளின்ட் ஈஸ்ட்வுட் தான் லாரன்ஸிற்கு ஆலீஸ் சீசர் என்னும் பெயரை வைக்கிறார். அதே போல எஸ்.ஜே சூர்யாவும் தன்னை சத்யஜித்ரேவின் உதவி இயக்குனர் என கூறியே அறிமுகமாகிறார்.

வெற்றிமாறன், பா.ரஞ்சித் போல படத்தில் அரசியலை அதிகமாக பேசியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இரண்டாம் பாதி முழுக்க அதை பார்க்க முடிகிறது.

முக்கியமாக 1970களில் சினிமாவின் தாக்கம் மக்கள் மத்தியில் எப்படி வேறூன்றி இருந்தது. அது அரசியலை எப்படி புரட்டி போட்டது. உண்மையில் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை கார்த்தி சுப்புராஜ் படத்தில் பேசியுள்ளார்.

படத்துல லாரன்ஸ் காட்டுவாசி.. 1975 ல நடக்குற கதை!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்..

பீட்சா திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு பிறகு அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் தேசிய விருதை பெற்றது மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கதையமைப்பை கொண்டு மற்றொரு திரைப்படம் எடுத்தால் என்ன என்று யோசித்த கார்த்திக் சுப்புராஜ் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

கதைப்படி 1975 இல் நடக்கும் கதையாக இந்த படம் இருக்கிறது. படத்தில் இந்தியாவின் பிரபல இயக்குனரான சத்யஜித்ரேவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த நபராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். அவர் பழங்குடிகளை பற்றி ஒரு படம் எடுப்பதற்காக லாரன்ஸை தேடி வருகிறார்.

ஏனெனில் லாரன்ஸ் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த விஷயங்களை எல்லாம் தனது பேட்டியில் கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். எனவே இதை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாலி படத்தில் சிறப்பா வரவேண்டிய சீன்!.. அஜித் ஒப்புக்கொள்ளாததால் வைக்கல!..

சில திரைப்படங்களில் அற்புதமான சில காட்சிகள் வைக்க நினைத்தாலும் கூட சில தடைகளின் காரணமாக அந்த காட்சிகள் வைக்கப்படாமல் போகும். இயக்குனர்கள் பலரே இது குறித்து கூறும் பொழுது திரைப்படத்தை நாங்கள் எப்படி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ 100% அப்படி எந்த ஒரு காட்சியையும் எங்களால் எடுக்க முடிந்தது கிடையாது.

அங்கு ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப படத்தின் காட்சிகள் மாறுபடும் எனவே நாம் எடுக்க நினைத்த காட்சியிலிருந்து 50% சரியாக வந்து விட்டாலே அது வெற்றி தான் என்கிற ரீதியில்தான் படப்பிடிப்பு இருக்கும் என்று கூறியுள்ளனர்.

வாலி திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சி நடிகர் அஜித்தால் நிராகரிக்கப்பட்டது குறித்து அந்த படத்தில் பணி புரிந்த உதவி இயக்குனர் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறும் பொழுது அதில் சிம்ரன் கதாபாத்திரத்திற்கு அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் இருக்கும்.

இதனை அறிந்த சிம்ரனின் கணவனான தம்பி கதாபாத்திரம் அவன் மீசையை எடுத்துவிட்டு வந்து சிம்ரனிடம் அதை காட்டி இனி உனக்கு யார் அண்ணன், யார் தம்பி என்கிற சந்தேகம் வராது. மீசை இல்லாமல் இருந்தால் அதுதான் நான் என்று கூறியிருக்கிறார்.

நேரத்தில் பார்த்தால் அண்ணன் கதாபாத்திரமும் மீசையை எடுத்து விட்டு வருகிறார். இப்படியான ஒரு காட்சி படத்தில் வைக்கப்பட இருந்தது ஆனால் இந்த காட்சிக்கு பிறகு முழுக்க முழுக்க அஜித் மீசை இல்லாமல் நடிப்பது போன்ற காட்சிகள் இருக்கும். ஆனால் அஜித் மீசையை எடுப்பதற்கு சுத்தமாக ஒத்துக்கொள்ளவே இல்லை இதனால் மொத்தமாக அந்த காட்சியை படத்திலிருந்து தூக்கி இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா

இன்னைல இருந்து நான் உங்களுக்கு ரசிகன்!.. எஸ்.ஜே சூர்யாவை பார்த்து வியந்து போன விஜய்!..

1992 இல் வந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதில் பூவே உனக்காக திரைப்படம் அவருக்கு ஒரு மாற்றமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார் விஜய். தற்சமயம் ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

1999 காலகட்டம் விஜய்க்கு கொஞ்சம் மோசமான காலகட்டமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் அவர் நடித்த பிரியமுடன், நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவு போன்ற திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை இந்த நிலையில் விஜய் மீண்டும் தமிழ் சினிமாவில் வரவேற்பு பெறுவதற்கு உதவிய திரைப்படம் குஷி.

இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா. இதனால் எஸ்.ஜே சூர்யாவிற்கும் விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. பல வருடங்களாக இந்த நட்பு நீடித்தும் வருகிறது. இதற்கு நடுவே சில காலங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா படம் இயக்குவதை விட்டுவிட்டு படங்களில் நடிக்க துவங்கினார்.

அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படி அவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை இந்த திரைப்படத்தை பார்த்த விஜய் உடனே எஸ்.ஜே சூர்யாவிற்கு ஃபோன் செய்துள்ளார்.

போன் செய்து சிறப்பாக நீங்கள் நடித்துள்ளீர்கள் இந்த படத்தை பார்த்தது முதல் உங்களுக்கு நான் ரசிகனாகிட்டேன் என்று விஜய்க்கு கூறியுள்ளார் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் எஸ்.ஜே சூர்யா.

பாரதிராஜாவுக்கு பிறகு நான் பார்த்து மிரண்ட இயக்குனர்!.. எஸ்.ஜே சூர்யாவை வியக்க வைத்த தனுஷ் படம்!..

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் பிறகு இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே சூர்யா. சொல்ல போனால் ஆரம்பம் முதலே தமிழில் தோல்வியே காணாத வெற்றி இயக்குனர் என்று எஸ்.ஜே சூர்யாவை கூறலாம்

ஏனெனில் அவரது முதல் திரைப்படமான வாலி திரைப்படமே ஒரு சோதனை ஓட்டம் என்று தான் கூற வேண்டும். அதுவரை அஜித்தை யாரும் வில்லனாக காட்டாத பொழுது அவரை வில்லனாக நடிக்க வைத்து வாலி திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே சூர்யா.

அவரது முதல் படமே பெரும் ஹிட் கொடுத்தது. அதற்குப் பிறகு  அவர் இயக்கிய குஷி திரைப்படம் பெரும் வசூலை பெற்று தந்தது. தற்சமயம் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் குறித்து பேசி இருந்தார். கர்ணன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை வெகு நாட்களாக எஸ்.ஜே சூர்யா பார்க்காமல் இருந்தாராம். அப்பொழுது தனுஷ் ஒரு நாள் போன் செய்து கர்ணன் திரைப்படத்தை பார்த்து விட்டீர்களா? என கேட்டுள்ளார்.

இல்லை அந்த படம் குறித்து நிறைய கேள்விப்பட்டேன் ஆனால் இன்னும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் எஸ்.ஜே சூர்யா. உடனே அந்த படத்தை பார்த்துவிட்டு அது பற்றி என்னிடம் கூறுங்கள் என்று கூறியுள்ளார் தனுஷ். எஸ்.ஜே சூர்யாவும் இரவோடு இரவாக அந்த படத்தை பார்த்துள்ளார் பார்த்துவிட்டு மறுநாள் தனுஷிற்கு போன் செய்து என்ன மாதிரியான ஒரு திரைப்படம் இது. எப்படி இவ்வளவு சிறப்பாக ஒரு திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

பாரதிராஜாவிற்கு பிறகு நான் வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக மாரி செல்வராஜ் இருக்கிறார் என்று கூறியுள்ளார் எஸ் ஜே சூர்யா. அதேபோல தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை பெற்று தந்த திரைப்படமாக கர்ணன் திரைப்படம் இருந்தது.

சினிமாவில் காலியாக இருந்த நேரத்தில் கதையே இல்லாத படத்தில் நடிச்சேன்!. விஜய்யை தூக்கிவிட்ட படம்!.

சினிமாவில் எப்போதுமே நடிகர்களுக்கு வெற்றி படங்களாகவே அமைவதில்லை. சில நேரங்களில் படங்கள் பெரும் தோல்வியையும் காண்பதுண்டு. பெரிய நடிகர்களுக்கே கூட இது நடப்பதுண்டு. ஆனால் தொடர்ந்து ஒரு நடிகர் தோல்வி படங்களாக நடிப்பதால் அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கிவிடும்.

கிட்டத்தட்ட 2000 ஆம் வருடம் விஜய்க்கு அப்படிதான் இருந்தது. அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் அஜித் நடித்த முகவரி மாதிரியான படங்கள் அப்போது பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

இந்த நிலையில்தான் எஸ்.ஜே சூர்யா குஷி படத்தின் கதையை விஜய்யிடம் கூறினார். அவர் கதை சொன்ன விதமே மிகவும் பிடித்திருந்ததால் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய், குஷி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

ஒருமுறை விஜய்யை சந்தித்த இயக்குனர் விக்ரமன் இதுக்குறித்து கேட்கும்போது அது எப்படி விஜய் கதையே இல்லாத ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடித்து அதில் ஹிட்டும் கொடுத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் எஸ்.ஜே சூர்யா கதை சொன்ன விதமே நன்றாக இருந்தது. அதனால்தான் ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.

என்னையா அந்த மாதிரி படத்துல நடிக்க சொல்ற!.. எஸ்.ஜே சூர்யாவை அவமானப்படுத்திய ஹீரோ!..

தமிழில் உள்ள நடிகர்களில் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வரும் நடிகராக எஸ் ஜே சூர்யா இருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக உதவி இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தார். அவர் இயக்கிய வாலி, குஷி ஆகிய இரு திரைப்படங்களின் பெரும் வெற்றிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அடுத்ததாக ஒரு கதை எழுதினார்.

இந்த கதை கொஞ்சம் இளையோருக்கான கதையாக இருந்தது. இருந்தாலும் இது பயங்கர வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எஸ் ஜே சூர்யாவிற்கு இருந்தது. எனவே உடனடியாக அவர் ஒரு பிரபலமான ஹீரோ நடிகரை சந்தித்து அந்த படத்தின் கதையை கூறினார்.

ஆனால் அந்த நடிகர் இந்த மாதிரியான கவர்ச்சி படங்கள் எல்லாம் என்னால் நடிக்க முடியாது, என்ன மாதிரியான கதை எல்லாம் சொல்ற நீ என்று எஸ்.ஜே சூர்யாவை திட்டிவிட்டார். அதன் பிறகு அங்கிருந்து வெளியேறிய எஸ் ஜே சூர்யா எதற்கு இவர்கள் காலையெல்லாம் பிடித்துக் கொண்டு, நாமே அந்த படத்தில் நடித்தால் என்ன என்று முடிவு செய்தார்.

அதனை தொடர்ந்து அவர் நடித்து வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் அன்பே ஆருயிரே, ஒருவேளை அந்த நடிகர் அப்பொழுது நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் தனக்குள் இருக்கும் நடிப்புத்திறனை எஸ் ஜே சூர்யா அறியாமலே போயிருக்க வாய்ப்புகளும் உண்டு

அந்த படம் ஓடலைனா ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு போக இருந்தேன்!.. எஸ்.ஜே சூர்யாவை காப்பாற்றி விட்ட படம்!..

வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. வாலி, குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டும் தான் மற்ற நடிகர்களை வைத்து இயக்கினார்.

அதற்குப் பிறகு அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் அதற்கு அடுத்த படம் நியூ பிறகு அன்பே ஆருயிரே என்கிற திரைப்படத்தில் எல்லாம் அவரே இயக்கி நடித்தார். இந்த நான்கு திரைப்படங்களுமே எஸ்.ஜே சூர்யாவிற்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்கள்.

ஆனால் நியூ படத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட சிரமங்கள் சற்று அதிகமானது. அது குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது நியூ திரைப்படத்தை இயக்கும் பொழுது அதுவரை எஸ்.ஜே சூர்யா சம்பாதித்து இருந்த அனைத்து பணத்தையும் நியூ திரைப்படத்திற்காக செலவு செய்தார்.

அந்த திரைப்படம் மட்டும் ஒரு வேலை ஓடவில்லை என்றால் பழையபடி ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு சென்றுவிடலாம் என்று முடிவெடுத்திருந்தார். அந்த அளவிற்கு தீர்க்கமாக நியூ திரைப்படத்தை நம்பி இருந்தார் எஸ்.ஜே சூர்யா.

அதே போலவே அந்த திரைப்படமும் திரையில் வெளியான பிறகு அவர் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியையும் கொடுத்தது சில சர்ச்சைகளையும் கொடுத்தது. ஆனால் எஸ்.ஜே சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இப்போது வரை நியூ ஒரு முக்கியமான திரைப்படமாகவே உள்ளது.

உங்களுக்கு ரூட்டு தல சிவாஜின்னு ஒருத்தர் இருக்காரு சார்!.. எஸ்.ஜே சூர்யா கேள்விக்கு பதில் கொடுத்த ரசிகர்கள்!..

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகனாக மாறியவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனராக இருந்தபோதும் சரி நடிகராக இருந்தபோதும் சரி. தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்தார் எஸ்.ஜே சூர்யா.

ஆனால் அன்பே ஆருயிரே திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. அதனை தொடர்ந்து சில வருடங்கள் சினிமாவை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு எஸ்.ஜே சூர்யாவிற்கு ஒரு கம்பேக்காக இறைவி திரைப்படம் அமைந்தது.

இறைவி திரைப்படத்திற்கு பிறகு ஸ்பைடர் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதனை தொடர்ந்து இவர் வில்லனாக நடித்த தொடங்கினார் எஸ்.ஜே சூர்யா. தற்சமயம் அவர் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

கிட்டத்தட்ட 100 கோடியை தொட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் விஷால் எஸ்.ஜே சூர்யா மற்றும் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மூவருக்குமே ஒரு ரீ என்ட்ரி திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது இதுவரை தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் ஹீரோ இருவருமே டபுள் ஆக்டிங் ஆக நடித்து எந்த படமும் வந்ததில்லை இதுதான் முதல் முறை என்று கூறினார் எஸ் ஜே சூர்யா.

ஆனால் இதற்கு முன்பே மூன்று சிவாஜி கணேசன் இரண்டு எம்.ஆர் ராதா என்ற காம்போவில் பலே பாண்டியா என்கிற சிவாஜி கணேசனின் படம் வெளியாகி இருக்கிறது. இதனை கூறி உங்களுக்கு முன்பே சிவாஜி இதையெல்லாம் செய்து விட்டார் என்று நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.

மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் பண்ணவே லஞ்சம் வாங்குனாங்க!.. பிரதமரிடமே புகாரளித்த விஷால்

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால் செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார் விஷால். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன அதில் சண்டக்கோழி திமிரு போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை ஆகும்.

தொடர்ந்து திரைப்படங்களாக நடித்து வந்த விஷாலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. அதன் பிறகு அவருக்கு நடிப்பில் ஒரு இடைவெளி ஏற்பட்டது திரும்ப கம்பேக்காக லத்தி திரைப்படம் மூலமாக விஷால் வந்தார்.

ஆனால் லத்தி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை தற்சமயம் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மார்க் ஆண்டனி திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்த படத்தை பாலிவுட்டிலும் ரிலீஸ் செய்தார் விஷால் தற்சமயம் பாலிவுட்டில் நடந்த ஊழல் குறித்து முக்கியமான தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால்.

அதன்படி பாலிவுட்டில் சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்கும் படத்தை வெளியிடுவதற்கும் கிட்டத்தட்ட 6.5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் விஷால். சான்றிதலுக்காக மூன்று லட்சமும் படத்தை வெளியிடுவதற்காக 3.5 லட்சமும் லஞ்சமாக வாங்கியுள்ளனர். இந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட விஷால் இது குறித்து ஆய்வு செய்யும் படி பிரதமர் நரேந்திர மோடியிடமும், மகாராஷ்டிரா முதலமைச்சரிடமும் கேட்டுள்ளார்.