ஒரு காலத்தில் சர்ச்சைக்குரிய இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் இயக்குமர் எஸ்.ஜே சூர்யா. அவரது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அவரை குறித்து எதாவது ஒரு சர்ச்சை வெளிவந்து கொண்டே இருக்கும்.
அதில் உச்சப்பட்ச சர்ச்சைக்கு உள்ளான திரைப்படம் நியூ. 2004 இல் வந்த இந்த படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். சென்சார் போர்டுக்கு சென்றது முதலே இந்த திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது. சென்சார் போர்ட்டில் படத்தில் அதிக காட்சிகளை நீக்குமாறு கூறினார்கள்.
மேலும் ஒரு முக்கியமான பாடலையும் கூட நீக்குமாறு கூறப்பட்டது. அப்போது அங்கு சென்சார் ஆபிசராக இருந்த பெண் ஒருவர்தான் இந்த பாடலை நீக்குமாறு கூறினார். இதனால் கோபமான எஸ்.ஜே சூர்யா அவரை தாக்க முற்பட்டார்.
இதனையடுத்து அந்த பெண் எஸ்.ஜே சூர்யா மீது வழக்கு போடவே அவரை 2005 ஆம் ஆண்டு கைது செய்தனர். அந்த பெண்மணிதான் தற்சமயம் தமிழகத்தில் பி.ஜே.பி கட்சியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் அவர்கள். நியூ படம் வந்த சமயத்தில் இவர் சினிமா தணிக்கை குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகர் என்பதையும் தாண்டி பல விஷயங்களை செய்து வருகிறார். பாடல் பாடுவது, பாடலுக்கு வரிகள் எழுதுவது இப்படி பல விஷயங்களை தனுஷ் செய்து வருகிறார்.
இயக்குனராகவும் தனுஷ் வலம் வந்துள்ளார். தனுஷ் மற்றும் ராஜ்கிரண் நடித்து வெளிவந்த பா.. பாண்டி திரைப்படத்தை இவர்தான் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்சமயம் தனுஷ் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மட்டுமின்றி வாத்தி படத்தின் வேலைகளும் சென்றுக்கொண்டுள்ளன. இவை இரண்டும் முடிந்த பிறகு தனுஷ் இயக்கத்தில் எடுக்கவிருக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கும் என கூறப்படுகிறது.
மாநாடு திரைப்படம் வெளியானது முதல் சிம்புவை போலவே நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் புகழும் உயர்ந்துள்ளது. மாநாடு திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தை பலரும் வெகுவாக ரசித்தனர்.
இதனால் பலர் எஸ்.ஜே சூர்யாவிற்கு ரசிகராகிவிட்டனர். அதன் பிறகு டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்சமயம் தமிழில் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இந்த சீரிஸ் இந்திய அளவில் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
தமிழ்,ஹிந்தி,மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது. வதந்தி என இந்த சீரிஸ்க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சீரியஸான போலீஸ் ஆபிசராக எஸ்.ஜே சூர்யா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூழல் சீரிஸை தயாரித்த புஷ்கர் காயத்ரிதான் இந்த சீரிஸையும் தயாரித்துள்ளனர். கொலைகாரன் திரைப்படத்தின் இயக்குனர் ஆண்ட்ரோ லூயிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கொலைகாரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதால் இந்த தொடரும் கூட நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடர் வருகிற டிசம்பர் 2 அன்று அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்து, இயக்குனராக மாறி, பிறகு கதாநாயகனாக மாறி தற்சமயம் வில்லனாக நடித்து வருபவர் எஸ்.ஜே சூர்யா.
நியூ போன்ற திரைப்படங்கள் வந்த காலங்களில் இவர் சர்ச்சைக்குரிய நடிகர் என்று அழைக்கப்பட்டார். ஆனால் அந்த காலக்கட்டங்களிலேயே தொடர்ந்து நியூ, வியாபாரி என புது புது கதைகளை படமாக்கி வந்தவர் எஸ்.ஜே சூர்யா.
தற்சமயம் மாநாடு திரைப்படத்தில் வில்லனாக தோன்றினார். அதில் இருந்து அவருக்கு மீண்டும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பழைய பேட்டி ஒன்றில் அவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி பேசப்பட்டது.
அப்போது அதுக்குறித்து பேசிய எஸ்.ஜே சூர்யா “அப்போது நான் தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பணிப்புரிந்து வந்தேன். அப்படி ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நான் நடித்த படம் கிழக்கு சீமையிலே. அதில் ஒரு சண்டை காட்சியில் நான் வருவேன்” என கூறியுள்ளார் எஸ்.ஜே சூர்யா.
மேலும் அப்போதெல்லாம் திரையில் நாம் தெரிவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அது அனைத்தையும் செய்ய வேண்டும் என இருந்தேன். முக்கியமாக நடிப்பின் மீது நான் மிகுந்த ஆர்வத்தில் இருந்தேன்” என கூறுகிறார் எஸ்.ஜே சூர்யா.
தமிழின் மிகப்பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். தமிழில் ஒரு சில இயக்குனர்களுக்குதான் தனியாக ஒரு ரசிகர் வட்டம் இருக்கும். அப்படி ஒரு ரசிக வட்டாரத்தை கொண்டவர் மணிரத்னம்.
இந்நிலையில் உறுமி திரைப்படம் வெளியான சமயத்தில் அதன் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார் எஸ்.ஜே சூர்யா. அந்த விழாவில் உறுமி படம் குறித்து அவர் பேசியுள்ளார்.
அப்போது அந்த விழாவில் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இருவருமே இருந்தனர். அப்போதுதான் துப்பாக்கி திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததாம். அந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
அப்போது அந்த மேடையில் துப்பாக்கி குறித்து பேசிய எஸ்.ஜே சூர்யா, “இயக்குனர் மணிரத்னம் ரஜினியை வைத்து தளபதி படத்தை இயக்கியபோது அவர்கள் இருவருக்கும் இடையே நல் உறவை உருவாக்கி ஒரு தூணாக இருந்தவர் சந்தோஷ் சிவன். தற்சமயம் நமது சின்ன மணிரத்னமான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் துப்பாக்கிக்கும் ஒரு தூணாக இருப்பார் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
ஏற்கனவே அப்போது விமர்சனத்தில் இருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். அவரை இயக்குனர் மணிரத்னத்தோடு ஒப்பிட்டு பேசியதை அப்போது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
வித்தியாசமான கதைகளம் என்பதை தாண்டி, குழப்பமான கதைகளை படமாக்குவதும் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுவும் கோப்ரா திரைப்படத்தில் வருவது போல பல கெட்டப்களில் ஹீரோக்கள் திரையில் வருவது என்பது ரசிகர்களால் வரவேற்கப்படும் விஷயமாக உள்ளது.
அந்த வகையில் தற்சமயம் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஷாலுக்கு அப்பாவாக எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். படத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் இருவருமே இரட்டை கதாபாத்திரங்களாக நடிக்கிறார்களாம்.
இதற்கு முன்பு ஜீன்ஸ் என்கிற படத்தில் இதே போல நாசர், பிரசாந்த் இருவருமே இரட்டை கதாபாத்திரங்களாக நடித்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கதையில் இன்னும் மாற்றமாக சில விஷயங்கள் உள்ளன. படத்தின் கதையானது ஐந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கிறதாம். இந்த ஐந்து காலக்கட்டங்களிலும் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா இருவரும் ஐந்து விதமான கெட்டப்களில் வருகிறார்களாம்.
அனேகன் படத்தில் வருவது போல ஜென்ம ஜென்மமாக நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு குழப்பமான கதையை படத்தில் பார்வையாளர்களுக்கு எந்த அளவில் விளக்க போகிறார்களோ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான இயக்குனர் என பெயர் வாங்கிய ஒருவர் எஸ்.ஜே சூர்யா, இவர் இயக்கும் திரைப்படங்கள் மற்றும் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும். நியு, அன்பே ஆருயிரே, வியாபாரி என பல படங்கள் அதில் அடங்கும்.
தற்சமயம் வெளியான மாநாடு, டான் திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. இதனால் தற்சமயம் அதிக சினிமா வாய்ப்புகளை இவர் பெற்று வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா சிரிக்கும் எமோஜியை போட்டு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாம் மொபைல் பயன்படுத்தும்போது சில சமயங்களில் இணைய வேகமானது மிகவும் குறைவாக ஆகிவிடும். அப்போது ஏரோப்ளேன் மோடில் போட்டு திரும்ப சகஜ நிலைக்கு கொண்டு வரும்போது இணைய வேகம் சற்று அதிகரித்திருக்கும். அதை எஸ்.ஜே சூர்யா வீடியோவுடன் மெர்ஜ் செய்து நகைச்சுவை வீடியோவை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
அன்பே ஆருயிரே திரைப்படத்தில் கதாநாயகியின் தோழனை எஸ்.ஜே சூர்யா அடிப்பது போன்ற காட்சி வரும். அந்த காட்சியை இந்த கண்டென்ட்க்கு பயன்படுத்தி எஸ்.ஜே சூர்யாவையே ரசிக்க வைத்துள்ளனர் நமது மீம் க்ரியேட்டர்கள்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips