சின்ன மணிரத்னம்தான் நம்ம ஏ.ஆர் முருகதாஸ் – பேட்டியில் பேசிய எஸ்.ஜே சூர்யா

தமிழின் மிகப்பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். தமிழில் ஒரு சில இயக்குனர்களுக்குதான் தனியாக ஒரு ரசிகர் வட்டம் இருக்கும். அப்படி ஒரு ரசிக வட்டாரத்தை கொண்டவர் மணிரத்னம்.

இந்நிலையில் உறுமி திரைப்படம் வெளியான சமயத்தில் அதன் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார் எஸ்.ஜே சூர்யா. அந்த விழாவில் உறுமி படம் குறித்து அவர் பேசியுள்ளார்.

அப்போது அந்த விழாவில் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இருவருமே இருந்தனர். அப்போதுதான் துப்பாக்கி திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததாம். அந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அப்போது அந்த மேடையில் துப்பாக்கி குறித்து பேசிய எஸ்.ஜே சூர்யா, “இயக்குனர் மணிரத்னம் ரஜினியை வைத்து தளபதி படத்தை இயக்கியபோது அவர்கள் இருவருக்கும் இடையே நல் உறவை உருவாக்கி ஒரு தூணாக இருந்தவர் சந்தோஷ் சிவன். தற்சமயம் நமது சின்ன மணிரத்னமான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் துப்பாக்கிக்கும் ஒரு தூணாக இருப்பார் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

ஏற்கனவே அப்போது விமர்சனத்தில் இருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். அவரை இயக்குனர் மணிரத்னத்தோடு ஒப்பிட்டு பேசியதை அப்போது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.

Refresh