Connect with us

தமன்னா பத்தி அப்படி சொன்னது தப்பு.. மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்..!

News

தமன்னா பத்தி அப்படி சொன்னது தப்பு.. மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்..!

Social Media Bar

Actor Parthiban: தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவராக விளங்குபவர் பார்த்திபன்.

இன்றும் ரசிக்கக் கூடிய படங்களில் பார்த்திபனின் படமும் கட்டாயம் இடம்பெறும்.

மேலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும், தனித்துவமாக தெரியும் படி இயக்கி இருப்பார்.

பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக தனது வாழ்க்கையை தொடர்ந்த பார்த்திபன் தற்போது பல விருதுகளை பெற்ற நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

தைரியசாலி பார்த்திபன்

பார்த்திபன் எப்பொழுதும் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக எந்த இடத்திலும் எந்த மேடையிலும் வெளிப்படுத்தக் கூடிய நபராக இருப்பார்.

இதனால் பலரும் இவர் பேசுவது பற்றி பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் இவரின் கருத்துக்கள் பதிவிடும் முறையை படங்களில் காமெடியாகவும் கூட பயன்படுத்தி வந்தார்கள்.

Parthiban apologized

ஆனால் இது எதனை பற்றியும் கண்டுகொள்ளாத பார்த்திபன் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எந்த இடத்திலும் சொல்ல தயங்காமல் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

மன்னிப்பு கேட்ட இயக்குனர் பார்த்திபன்

இயக்குனர் பார்த்திபன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருவதுண்டு அதற்கு காரணம் அவர் கொடுக்கும் பேட்டியில் அவர் கூறும் கருத்துகள் தான்.

அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நடிகை தமன்னாவின் நடனம் குறித்த ஒரு கருத்து ஒன்று பதிவிட்டு இருப்பார்.

அது தற்போது வைரலாகி வந்த நிலையில் இயக்குனர் பார்த்திபனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பார்த்திபன் கூறியதாவது, ஒரு படம் நல்ல ஓடுறதுக்கு முக்கிய காரணம் தமன்னாவின் நடனம் தான் என கூறி இருந்தார். மேலும் தமன்னாவின் நடனத்திற்கு பிறகு தான் அந்த படத்தில் கதை இருக்கும் என கூறியிருந்தார்.

அதாவது அவர் ரஜினியின் ஜெயிலர் படத்தையும், சுந்தர் சி யின் அரண்மனை 4 படத்தையும் பற்றி தான் கூறியிருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இவரின் கருத்து வைரலாகியதைத் தொடர்ந்து பார்த்திபன் விளக்கம் கொடுத்து மன்னிப்பும் கூறியுள்ளார்.

Parthiban

நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை பாதியாய் வெளியிடும்போது பாதிப்பு எனக் ஆகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும் இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தே பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யாரும் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன். என வீடியோ ஒன்றை பதிவிட்டு இணையதளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.

To Top