Cinema History
ஜனகராஜிற்கு பறிப்போன ஹீரோ வாய்ப்பு- வாழ்க்கையையே புரட்டி போட்ட ஒரு விபத்து!..
சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கும். அதில் முக்கியமான ஒன்று அவர்கள் ஒரு தனித்துவமான நகைச்சுவை திறனை கொண்டிருக்க வேண்டும். வழக்கமான நகைச்சுவையை செய்யும் நடிகர்கள் வெகு காலத்திற்கு தமிழ் சினிமாவில் நீடித்து நிற்க முடிவதில்லை.
அப்படி நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை கொண்டு பல காலங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்த திரை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் ஜனகராஜ்.
தமிழ் சினிமாவிற்கு ஜனகராஜ் வந்த பொழுது ஒரு கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையோடுதான் சினிமாவிற்கு வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஆரம்ப காலகட்டங்களில் நடித்த திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவே இல்லை. தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார்.
ஏனெனில் துணை கதாபாத்திரத்தில் இருந்து கதாநாயகனாகலாம் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த பாலைவனச்சோலை திரைப்படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஜனகராஜ்.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த சமயத்தில் ஒரு விபத்துக்கு உள்ளானால் அதிலிருந்து உயிர் பிழைத்து வருவதே அவருக்கு பெரும்பாடாகிவிட்டது. இந்த நிலையில் அவருடைய கண்ணுக்கு அருகில் விபத்து ஏற்பட்டதால் அவரது ஒரு கண் பாதிப்புக்குள்ளானது.
அவர் பேசும்பொழுது அவருடைய ஒரு கண் அவரை அறியாமலேயே மூடிக்கொள்ளும் என்கிற மாதிரியான பிரச்சனை இருந்தால் இனி அவர் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று தமிழ் சினிமாவில் அவரை ஒதுக்கி விட்டனர்.
ஆனால் அப்பொழுதும் மனம் தளராமல் விபத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையையே ஒரு நேர்மறையான விஷயமாக மாற்றி நகைச்சுவைக்கான ஒரு விஷயமாக மாற்றி அதை வைத்து பல புது ரியாக்ஷன்களை கொடுத்து நகைச்சுவை நாயகனாக உதயமானார் ஜனகராஜ்.
ஒருவேளை அந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால் பெரும் ஹீரோவாக கூட ஆகியிருப்பார் தனராஜ். ஏனெனில் நகைச்சுவையிலேயே சிறந்த நடிப்பை காட்டியவர், கதாநாயகனாக இன்னும் சிறப்பாகவே நடித்து இருப்பார் என்பது திரைத்துறையில் அவருடன் பழகிய அவரது நண்பர்கள் கருத்தாக உள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்