முதல் படம் எடுத்தப்பையே எனக்கு லட்சத்துல சம்பளம் கொடுத்தவர் விஜயகாந்த்! – மனம் நெகிழ்ந்த ராதா ரவி!

தமிழ் சினிமாவில் அதிகமாக நல்ல பெயரை பெற்றிருக்கும் நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். நடிகர் விஜயகாந்துடன் பணிப்புரிந்த எந்த ஒரு நடிகரை கேட்டாலும் விஜயகாந்த் போன்ற ஒரு மனிதரை பார்க்க முடியாது என கூறுவார்கள்.

Social Media Bar

நடிகர் ராதா ரவி விஜயகாந்துடன் நெடுநாள் நட்பில் இருப்பவர். விஜயகாந்த் நடித்த பல படங்களில் அவருடன் நடித்தவர். ஒரு முறை ராதா ரவி அவர் தந்தை எம்.ஆர்.ராதாவின் நினைவாக ஒரு சிலையை திறக்க முடிவு செய்தார். அந்த சிலையை திறக்க அதிக செலவானதால் முழு தொகையையும் அவரால் தயார் செய்ய முடியவில்லை.

ஒரு 30,000 ரூபாய் ராதா ரவியிடம் குறைவாக இருந்தது. இந்த விஷயத்தை அறிந்த விஜயகாந்த் உடனே ராதா ரவியை அழைத்து 30,000 ரூபாயை கொடுத்தார். அதை விஜயகாந்த் திரும்ப கேட்கவே இல்லை. அதன் பிறகு உழவன் மகன் என்கிற திரைப்படத்தை விஜயகாந்த் தயாரித்து நடித்தார்.

அவர் தயாரிக்கும் முதல் படமாக உழவன் மகன் இருந்தது. இதனால் இந்த படத்தை குறைந்த செலவில் தயாரிக்க முடிவு செய்திருந்தார் விஜயகாந்த். ஆனால் சம்பள விஷயத்தில் அனைவருக்கும் எவ்வளவு சம்பளம் தர வேண்டுமோ அந்த சம்பளத்தை தந்தார்.

அப்போது படத்தில் ராதா ரவியும் நடித்தார். அவருக்கு 75,000 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராதா ரவி 1 லட்ச ரூபாய் சம்பளம் எதிர்பார்த்தார். ஆனால் இதுக்குறித்து எப்படி விஜயகாந்திடம் கேட்பது என யோசனையாக இருந்தார். ஆனால் ராதா ரவிக்கு 75,000 ரூபாய்தான் சம்பளமாக தருகிறார்கள் என்பது விஜயகாந்துக்கே தாமதமாகதான் தெரிந்துள்ளது.

இதை அறிந்தவுடன் விஜயகாந்த் ராதா ரவியை அழைத்து “உனக்கு 2 லட்சம் சம்பளம்” என கூறியுள்ளார். அந்த 2 லட்சத்தில் விஜயகாந்திற்கு தர வேண்டிய 30,000 ரூபாயை கழித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார் ராதா ரவி. ஆனால் எம்.ஆர் ராதா சிலைக்கு என்னுடைய பங்காக இருக்கட்டும் என கூறி விஜயகாந்த் அந்த காசை வாங்கவில்லை  என ராதா ரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.