மத்தவன் வாழ்க்கையை பாக்குறதுதான் அவங்க வேலையே!.. பூமர் அங்கிள்ஸை வறுத்து எடுத்த விமல்!..

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விமல்.  ஒரு காலத்தில் விமல் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அவர் நடித்த களவாணி திரைப்படமானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதற்கு பிறகு அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படமும் கூட நல்ல வெற்றியை தந்தது. ஆனால் அதற்கு பிறகு விமல் தேந்தெடுத்த திரைப்படங்கள் யாவும் ஆவரெஜ் ரக திரைப்படங்களாகவே இருந்தன. இதனால் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த விமல் தற்சமயம் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

இடையில் அவர் நடித்து வெளிவந்த விலங்கு வெப் சீரிஸ் நல்ல வெற்றியை கொடுத்தது. இடையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது அவரிடம் தற்சமயம் இருக்கும் பூமர் அங்கிள்ஸ்க்கு அட்வைஸ் கொடுப்பதென்றால் என்ன தருவீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விமல் ஆமாம் அப்படியான மனிதர்கள் இருக்கிறார்கள்., நாம் என்ன செய்தாலும் அவர்கள் அதில் குற்றம் கண்டுப்பிடிப்பார்கள், இப்படியான மனிதர்களுக்கு மற்றவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதில்தான் சுவாரஸ்யமே இருக்கும்.