கருப்பு உடையில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. வைரலாகும் புது பிக்ஸ்!..
கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். துவக்கத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதற்கு பிறகு அவர் நடித்த காக்கா முட்டை, ரம்மி மாதிரியான திரைப்படங்கள் ஓரளவு அவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்தன.

ஆனால் தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகளை போல பெரிய மார்க்கெட்டை ஐஸ்வர்யா ராஜேஷால் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவ்வப்போது அவருக்கு வாய்ப்புகள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது.

தற்சமயம் ஜிவி பிரகாஷோடு இணைந்து டியர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த நிலையில் திரைப்படங்களிலும் சரி இன்ஸ்டா பதிவுகளிலும் சரி மிக கவர்ச்சியாக எல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷை பார்க்க முடியாது.

ஆனால் சமீப காலமாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் அதிக கவர்ச்சியுடன் இருந்து வருகிறது. அவ்வளவாக இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிடாத ஐஸ்வர்யா ராஜேஷ் தற்சமயம் அந்த வகையிலும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.