Tamil Cinema News
காசுக்காக இதை பண்ண வேண்டியதா இருக்கு… ஓவியா கொடுத்த பதில்.!
சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகையாக ஓவியா இருந்து வருகிறார். ஓவியா மிக வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.
இருந்தாலும் ஒரு வளர்ச்சியை பெற்ற கதாநாயகியாக இல்லாமல் தொடர்ந்து சர்ச்சைக்கு மட்டுமே உள்ளாகி வரும் கதாநாயகியாக ஓவியா இருந்து வருகிறார். அவர் நடித்த களவாணி திரைப்படம் மூலமாக அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய வரவேற்புகள் கிடைத்தது.
ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத ஓவியா தொடர்ந்து மோசமான கதைகளை தேர்ந்தெடுத்ததன் மூலமாக சினிமாவில் தோல்வியை கண்டார். அதன் பிறகு அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்தது.
பதில் அளித்த ஓவியா:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ஓவியா அதிக பிரபலம் அடைந்தார். ஓவியாவிற்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது. ஆனால் பிக் பாஸை விட்டு வெளியே வந்த பிறகும் கூட நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தவறவிட்டார் ஓவியா.
தொடர்ந்து மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது வீடியோ என்று கூறி ஒரு ஆபாச வீடியோ இணையத்தில் வலம் வர துவங்கியிருந்தது. இது குறித்து பலரும் ஓவியாவிடமே கேள்வியை கேட்க துவங்கினர்.
ஆனால் அவற்றையெல்லாம் சாதாரணமாக டீல் செய்திருக்கிறார் ஓவியா இந்த நிலையில் இது குறித்து முன்பே ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது பிரபலமாக வந்துவிட்டோம் என்றாலே மக்களின் விமர்சனங்களுக்கு பயப்படக்கூடாது.
அவர்கள் கூறுவது எதுவும் உண்மை கிடையாது என்பது நமக்கு தெரியும் எனும் பொழுது அதற்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது அவர்களுக்கு நிறைய தேவை இருக்கிறது. அதற்காக இதை செய்கிறார்கள் சிலர் பணத்துக்காக இந்த மாதிரி பொய்யான விஷயங்களை பரப்புகின்றனர். அதையெல்லாம் நாம் தனித்தனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறியிருக்கிறார் ஓவியா.
