News
மார்க்கெட் போயிடுச்சு.. அதான் செ*ஸ்க்காக சாமியார்கிட்ட போராங்க!.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!.
Tamil cinema Actress: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக பாலியல் குற்றச்சாட்டு என்பது பெருகி வருகிறது. இதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது மன்சூர் அலிக்கானின் பிரச்சனைதான். மன்சூர் அலிக்கான் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளானது.
அதனை தொடர்ந்து குஷ்பு, லோகேஷ் கனகராஜ் என பலரும் த்ரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் மன்சூர் அலிக்கான். அதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்திரா தனக்கு ஒரு தெலுங்கு படத்தில் பாலியல் தொந்தரவு இருந்ததால்தான் நான் சினிமாவை விட்டே விலகினேன் என கூறினார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமியும் கூட அப்படியான விஷயங்களை செய்துள்ளார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு சர்ச்சையை கிளப்பினார். இதற்கு நடுவே சிவாஜி காலம் முதலே சினிமாவில் இருந்து வரும் காந்தாராஜ் சமீபத்தில் நடிகைகள் குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறும்போது நடிகைகள் வெளிப்படையாக சினிமாவில் யாருடனும் நெருங்கி பழக முடியாது. அதே போல அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே சாமியாரிடம் சென்று அவர்கள் தங்கள் ஆசையை தீர்த்து கொள்கின்றனர். எனவேதான் சாமியார்களுக்கு அதிக நடிகைகள் பக்தர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது என கூறியிருந்தார்!.
