News
முதல்வர் விஜய்யின் அடுத்த திட்டங்கள்.. வைரலாகும் போஸ்டர்.. இதுதான் காரணமா?
நடிகர் விஜய் போன வருடம் ஜனவரி மாதம் தனது கட்சி பெயரை அறிவித்தார். அதிலிருந்து தொடர்ந்து கட்சி தொடர்பான பணிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் விஜய்.
இப்பொழுது அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிப்பது கூட இல்லை. அவர் கடைசியாக நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் மட்டும் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றபடி தொடர்ந்து அரசியலில்தான் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் அவரது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் மாதம் விஜய் ஒரு மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அந்த மாநாடு முடித்த கையோடு தேர்தல் வரையிலும் தொடர்ந்து தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் போஸ்டர் ஒன்று சமீபத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் முதல்வர் விஜய்யின் திட்டங்கள் என்பதாக ஒரு வசனம் இடம் பெற்று இருந்தது.
இன்னும் விஜய் முதல்வராகவே ஆகாமல் இருக்கும் நேரத்தில் எப்படி இப்படி ஒரு வசனம் போஸ்டரில் வந்தது என பார்க்கும் பொழுது இது ஒரு படத்தின் ப்ரமோஷன் என தெரிகிறது.
யாதும் அறியான் என்கிற ஒரு திரைப்படத்தின் டிரைலரில்தான் இந்த போஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அப்பு குட்டி, தினேஷ், தம்பி ராமய்யா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது ஒரு ஹாரர் திரைப்படம் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் கதைப்படி 2026 ஆம் ஆண்டு கதை நடக்கிறது அந்த சமயத்தில் விஜய் முதல்வராக இருப்பதாக குறிப்பிடும் படி அப்படியான வசனம் இடம் பெற்ற செய்தி தாள் கொண்ட ஒரு காட்சி அந்த படத்தில் இருக்கிறது அதுதான் இப்பொழுது ட்ரண்டாகி வருகிறது.
