Tamil Cinema News
ஆப்பிள் பழம் போல இருக்கீங்க!.. ஆடிஷன் சென்று அழுதுக்கொண்டே வந்த சீரியல் நடிகை.. இதுதான் காரணம்!.
சில பிரபலங்கள் திரைத்துறையில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவராக இருப்பார்கள் ஏனெனில் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு சமூக வலைதளங்கள் அதிகமாக உதவுகின்றன.
இன்ஸ்டாகிராம், யூடியூப் மாதிரியான தளங்களில் தொடர்ந்து தங்களது முகங்களை பதிவு செய்வதன் மூலம் இவர்கள் மக்கள் மத்தியில் எளிமையாக வரவேற்பை பெற்று வருகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்தான் விஜே ஆன நடிகை ஐஸ்வர்யா ரகுபதி.
மேடைகளில் பேசி பிரபலம்:
நிறைய படம் திரைப்படம் தொடர்பான விழாக்களில் விஜே ஆக இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதேபோல நிறைய குறும்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதன் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை வாங்குவதற்கு ஐஸ்வர்யா ரகுபதி முயற்சி செய்து வருகிறார்.

சீரியல்களிலும் அதே சமயம் முயற்சி செய்து வருகிறார். ஐஸ்வர்யா ரகுபதி கருப்பு நிறம் கொண்ட பெண்கள் என்றாலே அவர்கள் வாய்ப்பைப் பெற்று சினிமாவில் வாழ்வது கடினமான விஷயமாக இருக்கும். இருந்தும் தொடர்ந்து போராடி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரகுபதி சமீபத்தில் கூட கூல் சுரேஷ் அவருக்கு மாலை போட்டது தொடர்பாக அதிக சர்ச்சை ஒன்று உருவானது.
இருந்தாலும் இந்த மாதிரியான தடைகளை எல்லாம் தாண்டி தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நாடகத்தின் ஆடிஷனுக்கு சென்ற தன்னுடைய அனுபவத்தை குறித்து பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் ஐஸ்வர்யா.
நாடக வாய்ப்பு:
அதில் அவர் கூறும் பொழுது நான் ஒரு நாடகத்திற்கான ஆடிஷனுக்கு செல்ல விரும்பினேன். அப்பொழுது அவர்கள் எனக்கு போன் செய்து நாடகத்தின் கதைப்படி தங்கை கதாபாத்திரம்தான் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தங்கை கொஞ்சம் மாடர்னான ஆள் என்பதால் வரும் பொழுது வெஸ்டன் உடை ஏதும் இருந்தால் கொண்டு வாருங்கள் என்று கூறினர்.
சரி என்று நானும் சில மாடர்ன் உடைகளை எடுத்து சென்று அவற்றை அணிந்து கொண்டு வந்தேன். மேக்கப் செய்து கொண்டு வர சொன்னார்கள் நானும் மேக்கப் செய்து கொண்டு வந்தேன். அப்பொழுது எனக்கு அண்ணனாக நடிக்கும் இரண்டு நடிகர்கள் இருந்தார்கள்.

அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் வெள்ளையாக ஆப்பிள் போல இருந்தார்கள் ஆனால் நான் கருப்பாக இருந்தேன். அதுவே எனக்கு பெரிய தடுமாற்றத்தை கொடுத்தது எப்படி இவர்களுக்கு என்னை தங்கையாக நடிக்க வைக்க போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இயக்குனர் அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை இருந்தாலும் என்னை பார்த்து கோபமடைந்து என்னம்மா நீ கதைப்படி ஒரு பணக்கார வீட்டு செல்ல பெண். ஆனால் கையில் ஒரு வளையல் கூட இல்லாமல் வந்து நிற்கிறாய் கழுத்தில் ஒரே ஒரு சின்ன செயின் மட்டும் போட்டு இருக்கிறாய், பார்க்க பணக்கார பெண் போல இல்லை, வேலைக்காரி போல இருக்கிறாய் என்று கூறிவிட்டார் அப்பொழுது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது என்று அந்த அனுபவத்தை பகிர்ந்து இருந்தார் ஐஸ்வர்யா ரகுபதி.
