குடித்துவிட்டு வாழ்க்கையை சீரழித்த அண்ணனும், தாயும்… ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த நடிகை!.

பண ரீதியாக ஒருவரை சார்ந்திருப்பது என்பது உலகம் முழுவதும் இருந்து வரும் விஷயம் என்றாலும் அப்படியான ஒரு விஷயம் சுரண்டலாக மாறும்போது பிரச்சனையாகிறது. அப்படியான ஒரு பிரச்சனையை சந்தித்தவர்தான் நடிகை சங்கீதா.

நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனால் அவர் அதிக வருவாய் ஈட்டி வந்தார். க்ரிஷ் என்கிற பின்னணி பாடகரை காதலித்து திருமணம் செய்த இவருக்கு தற்சமயம் இரண்டு குழந்தைகள் உள்ளன.

Social Media Bar

ஆனால் திருமணத்திற்கு முன்பு தனது தாய் மற்றும் அண்ணன்களிடம் நிறைய கொடுமைகளை அனுபவித்ததாக கூறுகிறார் சங்கீதா. அவர் நிறைய சம்பாதித்து வந்ததால் அவரது குடும்பம் செழிப்பாக இருந்துள்ளது. அவரது அண்ணன் எப்போதும் வெளிநாட்டு மதுபானங்களைதான் அருந்துவாராம்.

எனவே இந்த சொகுசு வாழ்க்கை பரிப்போய்விடக்கூடாது என்பதற்காக சங்கீதாவை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துள்ளது அவரது குடும்பம். க்ரிஷ்ஷை திருமணம் செய்துக்கொள்ள நினைத்தப்போது கூட ஒரு வெற்று செக்கில் கையெழுத்து வாங்கி கொண்டுதான் அனுப்பி வைத்தார்கள் என கூறியுள்ளார் சங்கீதா.

Source – Link