Cinema History
அண்ணன் என் புக்குக்கு சப்போர்ட் பண்ணுங்க!.. இளையராஜா, பாரதிராஜா ஒவ்வொருவரிடமும் ஏறி இறங்கிய கங்கை அமரன்… அட கொடுமையே!.
Gangai Amaran: தமிழ் சினிமாவில் இளையராஜாவை போலவே இசையமைக்க தெரிந்தவர் இயக்குனர் கங்கை அமரன், இளையராஜா இசையமைப்பதில் சக்கரவர்த்தி என்றாலும் அவரது தம்பியான கங்கை அமரன் அவரை விடவும் பன்முக திறமைகளை கொண்டவர்.
இருந்தாலும் சினிமாவில் அவருக்கான அங்கீகாரம் பெரிதாக கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். கரகாட்டக்காரன் மாதிரியான வெற்றி படங்களை கொடுத்த பிறகுதான் பலரும் கங்கை அமரனை கவனிக்க துவங்கினர்.
இது மட்டுமின்றி பாடல்களுக்கு வரிகளையும் கங்கை அமரன் எழுதியிருக்கிறார். மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்கிற பாடல் வரிகளை எழுதியவர் கங்கை அமரன் தான். ஆனால் இளையராஜா கங்கை அமரனுக்கு தர வேண்டிய மதிப்பை தரவில்லை என்றும் சினிமாவில் பேச்சுக்கள் உண்டு.
அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கங்கை அமரனுக்கு புத்தகம் எழுதுவதிலும் ஆர்வம் இருந்தது. எனவே தனது வாழ்க்கையில் நடந்த சுவையான அனுபவங்களை அவர் எழுத துவங்கினார். அது பண்ணைபுரம் எக்ஸ்ப்ரஸ் என்கிற பெயரில் புத்தகமாக வர இருந்தது. பொதுவாக இந்த மாதிரியான புத்தகங்களுக்கு பெரிய ஆள் யாராவது அணிந்துரை எழுதினால் மதிப்பாக இருக்கும்.
இந்த புத்தகத்திற்கு அண்ணன் இளையராஜா ஒரு அணிந்துரை எழுதினால் நன்றாக இருக்கும் என நினைத்தார் கங்கை அமரன் எனவே அவர் இளையராஜாவிடம் கேட்க இளையராஜா அப்போது பிஸியாக இருந்ததால் அணிந்துரை எழுதி தரவில்லை. பிறகு கலைஞர் மு கருணாநிதி மற்றும் இயக்குனர் பாரதி ராஜாவிடமும் முயற்சித்தார் கங்கை அமரன்.
ஆனால் இவர்கள் யாருமே அணிந்துரை எழுதி தராததால் அணிந்துரை என்றே ஒன்றே இல்லாமல் அந்த புத்தகம் வெளியானது. அவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தும் கங்கை அமரனுக்கு அணிந்துரை எழுதி கொடுக்க கூட யாரும் முன் வரவில்லை, கங்கை அமரனின் திறமை அங்கீகரிக்கப்படவில்லை என்பதற்கு ஒரு சான்றாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்