துணிவு படக்கதை அஜித்துக்கு முன்பு இவர்கிட்டதான் சொன்னாங்களாம்?-  வாய்ப்பை தவறவிட்ட நடிகர்!

தற்சமயம் அஜித் நடித்து வருகிற 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துணிவு. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதலில் அஜித்திற்காக எழுதப்படவில்லையாம்.

துணிவு படத்தின் கதையை சதுரங்க வேட்டை எடுக்கும்போதே எழுதிவிட்டாராம் ஹெச். வினோத். சதுரங்க வேட்டைக்கு பிறகு அவர் துணிவு திரைப்படத்தைதான் எடுக்க இருந்தாராம். அந்த கதையை கேட்ட ஒரு தயாரிப்பாளர் நேராக அவரை நடிகர் சூர்யாவிடம் அழைத்து சென்றுள்ளார்.

சூர்யாவிற்கும் அந்த கதை பிடித்திருந்தது. ஆனால் ஹை பட்ஜெட் படமான இதில் எப்படி ஒரு அறிமுக இயக்குனரை வைத்து நடிப்பது என்பது சூர்யாவிற்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அப்போதுதான் ஹெச்.வினோத் தனது முதல் படமான சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இதனால் சூர்யா தாமதமாக பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். அதன் பிறகு ஹெச்.வினோத் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மிகவும் பிரபலமானது.

அதை பார்த்த சூர்யா ஹெச்.வினோத்தின் திறமையை தெரிந்துக்கொண்டார். எனவே அவரின் துணிவு படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு முன்னரே தீரன் படத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட அஜித், ஹெச். வினோத்தை அழைத்து துணிவு படத்தில் அவர் நடிப்பதாக கூறிவிட்டார்.

இதனால் சூர்யாவிற்கு துணிவில் நடிக்கு வாய்ப்பு போனது. ஆனால் வரும் காலங்களில் அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் படம் நடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

Refresh