எந்த ஒரு துறையிலும் பெரிய அங்கீகாரமாக விருதுகள் பார்க்கப்படுகின்றன. தமிழ் சினிமாவிலும் கூட மக்கள் விருதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு திரைப்படத்திற்கு விருது வழங்குவது என்பது அந்த படத்திற்கான பெரும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதுக்கு அதிக முக்கியத்துவம் இருந்து வந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு துறைசார்ந்து தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
அதில் பெரிதாக தமிழ் படங்கள் எதுவும் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. கடைசி விவசாயி, ராக்கெட்டரி போன்ற திரைப்படங்களுக்கு மட்டும் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது தமிழில் வெளிவந்த முக்கிய படங்களான ஜெய் பீம், அசுரன், சார்பாட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களுக்கு எந்த ஒரு விருதும் வழங்கப்படவில்லை.
இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற விமர்சனத்துக்குள்ளான திரைப்படங்களுக்கு தேசிய விருது கொடுத்திருப்பது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தேசிய விருது பெற தகுதியான திரைப்படங்கள் என நினைக்கும் படங்களை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்!..