Cinema History
சென்சார் போர்டில் போய் சிக்கிய பாடல்! – எம்.ஜி.ஆரை கோர்த்து விட்ட வாலி!
ஒரு படத்தை தயாரிப்பதை விட பெரிய விஷயம் அதற்கு தணிக்கை சான்றிதழ் வாங்குவது. தனிக்கையில் மாட்டி இறுதிவரை வெளியாகாமல் போன திரைப்படங்கள் நிறைய உண்டு.
அந்த காலத்தில் நடிகர் எம்.ஜி.ஆரின் பல பாடல்கள் புரட்சிகரமாக இருக்கும். ஆனால் அவற்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார் எம்.ஜி.ஆர். எனவே அனைத்து பாடல்களையும் அவர் சரிபார்த்த பிறகு தணிக்கைக்கு அந்த பாடல்கள் அனுப்பப்படும்.

இந்த நிலையில் 1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படம் தயாராகி கொண்டிருந்தது. இந்த படத்தில் நான் ஆணையிட்டால் பாடல் முதலில் அவ்வாறு எழுதப்படவில்லை. அதற்கு பதிலாக நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்று பாடல் வரிகளை எழுதியிருந்தார் வாலி.
அந்த சமயத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இந்த வரிகள் அரசை விமர்சிப்பது போல உள்ளது எனக் கூறி அந்த வரிகளை நீக்குமாறு சென்சார் குழுவினர் கூறிவிட்டனர்.
இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரிந்ததும் வாலியை அழைத்த எம்.ஜி.ஆர் “எதுக்குய்யா அந்த கட்சி கூட கோர்த்து விடுற. முதல்ல பாட்டு வரியை மாத்து” எனக்கூறி அதன் பிறகுதான் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என பாடல் வரிகள் மாற்றப்பட்டது.
