Latest News
கதை ரொம்ப குழப்புதே?-மெமரிஸ் திரைப்பட விமர்சனம்!
தமிழில் நடிகர் வெற்றி எப்போதும் வித்தியாசமான கதை அமைப்பில் உள்ள திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். கூடிய சீக்கிரத்தில் விஜய் ஆண்டனியை போல் இவருக்கும் ஒரு ரசிக வட்டாரம் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
தமிழில் இவரது முதல் படமான எட்டு தோட்டாக்களில் துவங்கி தற்சமயம் வந்த ஜிவி 2 திரைப்படம் வரை சாதரணமான கதை அமைப்பில் இருந்து மாறுப்பட்டதாகவே இந்த படங்களின் கதை அமைப்புகள் உள்ளன. இன்று அவர் நடித்து வெளியான மெமரிஸ் திரைப்படமும் கூட ஒரு குழப்பமான கதை அமைப்பை கொண்ட திரைப்படமாகும்.
மெமரிஸ் திரைப்படத்தை இயக்குனர் ஷ்யாம் பிரவீன் இயக்கியுள்ளார். படத்தின் கதைப்படி கதாநாயகன் தான் யார் என்பதையே மறந்துவிடுகிறார். எனவே அவர் யார் என்பதை கண்டறிவதற்காக முயற்சிக்கும்போது செய்திதாளில் ஒரு செய்தியை பார்க்கிறார். அதில் சில நபர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதை செய்தது கதாநாயகன்தான் என்றும் போட்டுள்ளது.
இதை கண்டு கதாநாயகன் அதிர்ச்சியாகும் போது ஒரு நபர் வந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் கதாநாயகன் தான் யார் என்பதை கண்டறிந்து இந்த பிரச்சனையையும் சரி செய்ய வேண்டும் என கூறுகிறார். அதற்காக கதாநாயகன் மேற்கொள்ளும் சவால்களே முழு திரைப்படமாகும்.
வித்தியாசமான கதை அம்சம் என்பதால் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு நிலவி வருகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்