Connect with us

சீரியலில்தான் மோசடி.. நிஜ வாழ்க்கையும் இப்படியா… வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்த சீரியல் ஜோடிகள்!.

Serial actors and actresses

News

சீரியலில்தான் மோசடி.. நிஜ வாழ்க்கையும் இப்படியா… வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்த சீரியல் ஜோடிகள்!.

Social Media Bar

சினிமாவில் ஜோடியாக நடிக்கும் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்துக்கொள்வது வழக்கம் தான். அதிலும் இன்றைய காலத்தில் சீரியல்களில் ஒன்றாக நடிக்கும் பல பிரபலங்கள் திருமணம் செய்துக்கொள்கின்றனர். அதில் பலர் தங்கள் திருமண வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து வந்தாலும், சிலர் சில வருடங்களிலேயே பிரிந்து விடுகின்றனர்.

சமீப காலமாக இது அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்த பல சீரியல் நடிகர், நடிகைகள் ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விடுகின்றனர். அந்த வரிசையில் சீரியல்களில் நடித்து திருமணம் செய்து, கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த 5 ஜோடிகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா

Webseries மற்றும் சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் தான் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. ஜீ தமிழில் ஒளிப்பரப்பட்ட சிப்பிக்குள் முத்து என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

vishnukanth and samyuktha

ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைக்கூறிக்கொண்டனர். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.

ரக்ஷிதா மற்றும் தினேஷ்

சில சீரியல்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் நடிகை ரக்ஷிதா மற்றும் நடிகர் தினேஷ். இவர்கள் இருவரின் ஜோடிக்கு அதிக அளவிலான ரசிகர்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்கள், கடந்த ஒரு வருடகாலமாக பிரிந்து இருக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியது.

dinesh and ratchitha

அதனை தற்போது அவர்களும் பதிவு செய்துள்ளனர். தினேஷ் இறுதியாக கலந்துக்கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ரக்ஷிதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் ஆசை இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் இதற்கு ரக்ஷிதா தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

திவ்யா மற்றும் ஆர்ணவ்

திவ்யா மற்றும் ஆர்ணவ் இவர்கள் இருவரும் தமிழில் சில சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

divya arnav

ஆனால் அதன் பிறகு நடிகை திவ்யா கர்ப்பிணியாக இருந்த பொழுது ஆர்ணவ் தொடர்ந்து அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது நடிகை திவ்யா தன் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தாடி பாலாஜி மற்றும் நித்தியா

விஜய் டிவி மற்றும் சில படங்களில் நடித்ததன் மூலம் பிலபலமானவர் தான் தாடி பாலாஜி. இவர் பல வருடங்களுக்கு முன்பு நித்தியா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பல வருடங்களாக சிறப்பாக இருந்த இவர்கள் திருமண வாழக்கையில் சில வருடங்களுக்கு முன்பு பிரச்சனை தொடங்கியது.

thadi balaji

இவர்கள் இருவரும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால் அதற்குப் பிறகு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

ஜெயஸ்ரீ மற்றும் ஈஸ்வர்

jayasri Eswar

நடிகை ஜெயஸ்ரீ மற்றும் நடிகர் ஈஸ்வர் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் அதன் பிறகு ஈஸ்வர் சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர். ஆனால் இப்போது நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

To Top