Connect with us

போட்டியில் இறங்கிய ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி.. கலக்கத்தில் இருக்கும் எஸ்.கே.. நியாயமா இது!..

sk vijay sethupathi

News

போட்டியில் இறங்கிய ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி.. கலக்கத்தில் இருக்கும் எஸ்.கே.. நியாயமா இது!..

Social Media Bar

Sivakarthikeyan, Rajinikanth : ஏதாவது இரண்டு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றாலே அது பெரும் சச்சரவை ஏற்படுத்தும். ஆனால் இந்த முறை நான்கு ஹீரோக்கள் ஒரே நாளில் களம் இறங்க இருக்கின்றனர். இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு பெரிதாக எந்த படமும் போட்டியிடவில்லை என்பது பலருக்கும் தெரிந்ததே.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டுமே சின்ன ஹீரோக்கள் திரைப்படம்தான். ஆனால் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படங்கள் எல்லாமே பெரும் போட்டியுடன் களம் இறங்குகின்றன.

முதலில் பொங்கலுக்கு படம் வெளியிடலாம் என திட்டமிட்டது சிவகார்த்தியன்தான். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெகு காலமாக உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்திற்கு அதிகமான தொகையை செலவு செய்திருப்பதால் இந்த படத்தை மலை போல நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன்.

எனவே பொங்கலுக்கு தனது படத்தை வெளியிட முடிவு செய்தார் எஸ்.கே. அவர் அப்படி முடிவு செய்தப்போது எந்த படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில் எஸ்.கேவுடன் வெகு நாட்களுக்கு முன்பு பிரச்சனையில் பிரிந்த நடிகர் தனுஷ் அவருக்கு போட்டியாக கேப்டன் மில்லர் படம் மூலம் களம் இறங்குகிறார்.

Merry Christmas poster
Merry Christmas poster

அதே சமயம் தனுஷின் வசூலை முறியடிக்க அவரின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவர் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தையும் பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார். இவற்றிற்கு நடுவே தற்சமயம் நடிகர் விஜய் சேதுபதியும் போட்டியில் குதித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மேர்ரி கிருஸ்மஸ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் பிரபலம் காத்ரீனா கைஃப் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் கண்டிப்பாக இந்த படங்கள் அயலானின் வசூலை பாதிக்கும் என்பதால் தற்சமயம் சிவகார்த்திகேயன் மிகுந்த கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

To Top