Connect with us

2023 இல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தமிழில் வரவேற்பை பெற்ற 5 திரைப்படங்கள்!..

movie poster

Latest News

2023 இல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தமிழில் வரவேற்பை பெற்ற 5 திரைப்படங்கள்!..

Tamil Low budget movies 2023 : தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை படத்தை கதாநாயகர்களை வைத்து பார்ப்பவர்கள் இருந்தாலும் கூட மற்ற திரைப்படங்களை பார்க்கவும் ரசிக கூட்டம் இருக்கிறது. இந்த வருடம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள்தான் சிறப்பான வரவேற்பை பெறும் என்னும் எண்ணத்தை உடைத்துள்ளது இந்த ஆண்டு. அப்படியாக வரவேற்பை பெற்ற முக்கியமான சில குறைந்த பட்ஜெட் படங்களை இப்போது பார்க்கலாம்.

டாடா (Dada):

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 20 கோடி வரை பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் டாடா. கவின் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தின் கதை குடும்பங்கள் கொண்டாடும் கதையாக இருந்தது. காதல் ஜோடிகள் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொள்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு கதாநாயகன் பொறுப்பில்லாமல் இருந்த காரணத்தினால் பிரசவ நேரத்தில் கூட பெரும் அவதிக்குள்ளாகிறாள் கதாநாயகி. இதனால் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு அவர் சென்றுவிட அதை வளர்க்கிறார் கதாநாயகன். இதற்கு நடுவே மீண்டும் கதாநாயகியை சந்திக்க அதை வைத்து கதை செல்கிறது.

குட் நைட் (Good Night):

ஜெய் பீம் திரைப்பட புகழ் நடிகர் மணிகண்டன் நடிப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம் குட் நைட். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மோகன் என்னும் கதாநாயகன் சத்தமாக குறட்டை விடும் பழக்கம் கொண்டவராக இருக்கிறார்.

அது அவரது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கும் வகையில் குட் நைட் திரைப்படம் இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த வருடம் நல்ல வரவேற்பை பெற்றது. வினாயக் சந்திரசேகரன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

போர் தொழில் (Por Thozhil):

நடிகர் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து இந்த வருடம் வெளியான திரைப்படம்தான் போர்த்தொழில். விக்னேஷ் ராஜா இயக்கிய இந்த திரைப்படம் 50 கோடி வசூல் சாதனை படைத்தது. ஒரு ஊரில் மர்மமான முறையில் பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர்.

புது ட்ரைனிங் ஐ.பி.எஸ் அதிகாரியான அசோக் செல்வனும், அனுபவம் வாய்ந்த அதிகாரியான சரத்குமாரும் இணைந்து இந்த குற்றங்களை செய்யும் சைக்கோ கொலையாளியை கண்டறிவதே கதையாக உள்ளது. சுவாரஸ்யம் குன்றாத இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இறுகப்பற்று (Irugapatru):

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியாகி தாமதமாக வரவேற்பை பெற்ற திரைப்படம் இறுகப்பற்று. இதில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை விரிவாக பேசும் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மூன்று ஜோடிகளின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது.

படம் வெளியான முதல் சில நாட்கள் பெரிதாக வரவேற்பில்லை பெறவில்லை என்றாலும் தாமதமாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பார்க்கிங் (Parking):

வருட இறுதியில் வந்தாலும் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்ட திரைப்படம் பார்க்கிங். இயக்குனர் ராம்குமார் பாலக்கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

parking
parking

நடிகர் எம்.எஸ் பாஸ்கர் மற்றும் ஹரிஸ் கல்யாண் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் கார் பார்க் செய்வதில் ஏற்படும் பகையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. எம்.எஸ் பாஸ்கரின் அபாரமான நடிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top