Special Articles
தமிழில் இதுவரை வந்த சூப்பர்ஹீரோ படங்கள்.. ஒரு லிஸ்ட்!..
எல்லா காலங்களிலும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று அதிக வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் உலகம் முழுக்கவே சூப்பர் ஹீரோ கதைகளை கொண்டாட ஒரு ரசிக கூட்டம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்க சூப்பர் ஹீரோ திரைப்படங்களை எடுப்பதற்கான முயற்சிகளும் இருந்து கொண்டு உள்ளன.
இந்த நிலையில் தமிழில் அப்படி எடுக்கப்பட்ட சில திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.
வேலாயுதம்:
நடிகர் விஜய் நடித்து வெளியான வேலாயுதம் திரைப்படம் ஒரு வகையில் சூப்பர் ஹீரோ திரைப்படம்தான். சக்திகள் இருப்பவர் மட்டுமே சூப்பர் ஹீரோ என்று அர்த்தம் கிடையாது. ஏதேர்ச்சையாக விஜய் செய்யும் நிறைய நிகழ்வுகள் கெட்டவர்களுக்கு எதிராக முடிகிறது.
அதனை தொடர்ந்து வேலாயுதம் என்னும் சூப்பர் ஹீரோ ஒருவர் இருப்பதாகவும் அவர்தான் இதையெல்லாம் செய்கிறார் எனவும் பலரும் கூறுகின்றனர். அதற்கு பிறகு விஜய் நிஜமாகவே வேலாயுதமாக மாறுவதை வைத்து கதை செல்கிறது.
ஹீரோ
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் ஹீரோ. குழந்தைகள் மத்தியில் பிரபல நடிகராக இருக்கும் காரணத்தினால் அவர் அவ்வப்போது இந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுப்பது உண்டு. படத்தில் முழுக்க முழுக்க கல்வி அரசியலை பற்றி பேசப்பட்டிருக்கும்.
சிறு வயதிலேயே கண்டுப்பிடிப்புகள் மீது ஆர்வம் கொண்டு அதில் கவனம் செலுத்தும் குழந்தைகளை காலி செய்வதை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வேலையாக கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து அதனால் நேரடியாக பாதிக்கப்படும் சிவகார்த்திகேயன் ஹீரோ என்னும் சூப்பர் ஹீரோ வேடத்தில் செய்யும் விஷயங்களே படமாக இருக்கிறது
முகமூடி
லீ என்கிற மாணவன் ஒரு குங் ஃபூ பள்ளியில் குங் ஃபூ கற்று வரும் திறமையான மாணவன் ஆகும். அவன் அதே ஊரில் உள்ள காவல் அதிகாரியின் மகளை காதலித்து வருகிறான். இந்த நிலையில் அவளை ஒரு நாள் சந்திப்பதற்காக காஸ்டியும் டிசைனரான அவனது தாத்தாவிடம் ஒரு உடையை பெற்று வருகிறான்.
முகமூடி என்கிற மாறுவேடத்தில் அவன் வந்து கதாநாயகியிடம் வித்தை காட்டி கொண்டிருக்கும் அதே சமயம் காவல் அதிகாரியை யாரோ சுட்டு விடுகின்றனர். அது முகமூடி என்னும் கதாநாயகன் தான் என பலரும் நினைக்கின்றனர்.
இந்த நிலையில் முகமூடி என்னும் சூப்பர் ஹீரோவாக மாறும் கதாநாயகன் அதை கண்டறிவதே கதையாக உள்ளது.
மாவீரன்
அரசியல்வாதிக்கு எதிராக உருவாகும் ஒரு சூப்பர் ஹீரோவை அடிப்படையாக கொண்டு இதன் கதை செல்வதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் கதாநாயகர்கள் ஏழை குடும்பத்தில் இருந்து உருவாக மாட்டார்கள்.
ஆனால் மாவீரன் திரைப்படத்தில்தான் முதன்முதலாக குப்பத்தில் இருந்து ஒரு கதாநாயகன் உருவாவதாக கதை இருக்கும். நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ஓவிய கலைஞராக இருந்து வருவார்.
அவர் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு மாவீரன் என்கிற ஒரு காமிக்ஸ் எழுதி வரைந்து கொடுத்து கொண்டிருப்பார். அதன் மூலமாக அந்த பத்திரிக்கையிலேயே அவருக்கு வேலையும் கிடைக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில் சிவகார்த்திகேயன் அனைத்திற்கும் பயப்படும் ஒரு நபராக இருப்பார்.
சின்ன சின்ன சண்டைகளுக்கு கூட பயப்படுவார். அதனால் நிஜ வாழ்க்கையில் மக்களிடம் கேள்வி கேட்க முடியாத விஷயங்களை தனது காமிக்ஸ் மூலமாக கேட்பார் மாவீரன் என்று அவர் எழுதும் காமிக்ஸ் கதாபாத்திரம் நாள்தோறும் இவர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவது போல கதையை எழுதுவார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் ஒருநாள் எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு புது சக்தி கிடைக்கும் ஒரு குரல் எப்போதும் அவருடன் பேசிக்கொண்டே இருக்கும். அவருக்கு வரும் ஆபத்தை முன்கூட்டியே அந்த குரல் சொல்லும். மேலும் அவருக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதையும் அந்த குரல் சொல்லும்.
அதை வைத்து எப்படி ஒரு கதாநாயகனாக உருவாகிறார் சிவகார்த்திகேயன் என்பதுதான் இந்த படத்தின் கதை
வீரன்
நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாட்டார் தெய்வம் கிளம்பி வருவதாக எடுக்கப்பட்ட கதைதான் வீரன். வீரன் திரைப்படத்தைப் பொறுத்தவரை சிறுவயதிலேயே ஹிப் ஹாப் ஆதி ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருவார் அப்பொழுது இடி அவர் மீது இறங்கிய காரணத்தினால் அவருக்கு சில சக்திகள் வரும்.
ஆனால் அவரை அந்த சமயத்திலேயே வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். பிறகு வளர்ந்து பெரிய ஆளான பிறகு மீண்டும் தனது கிராமத்திற்கு ஹிப் ஹாப் ஆதி வருவார். அப்பொழுது அங்கு இருக்கும் வீரன் என்கிற அவர்களுடைய குல சாமி கோயிலின் நிலத்தை அபகரிப்பதற்கான திட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்.
இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி தனக்கு இருக்கும் சக்திகளை பயன்படுத்தி அவர்தான் அந்த வீரன் என்கிற குலசாமி என்பதாக ஒரு கதையை உருவாக்குவார். அதன் மூலமாக அந்த நிலத்தை மீட்டெடுக்க முடியும் என்று அவர் நினைப்பார் அதை வைத்து படத்தின் கதை சொல்லும் அதேபோல சில சக்திகளும் அந்த படத்தில் அவருக்கு இருக்கும்
கந்தசாமி
பேட்மேன் கதையை தழுவி தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் கந்தசாமி. தொடர்ந்து லஞ்சம் தவறான வேலைகளை செய்து பணத்தை குவிக்கும் பெரிய பணக்காரர்களிடம் இருந்து கந்தசாமி என்கிற கதாபாத்திரம் பணத்தை கொள்ளை அடித்து அதை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும்.
இதற்கு கந்தசாமி என்கிற தெய்வத்தின் பெயரை பயன்படுத்துவார். நடிகர் விக்ரம் அதாவது கந்தசாமி கோயில் என்கிற கோயில் ஒன்று இருக்கும் அங்கே சீட்டில் அனைவரும் தங்கள் வேண்டுதல்களை எழுதி போடுவார்கள். அதற்கு தேவைப்படும் பணமானது அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும் பணக்காரர்களிடமிருந்து பணத்தை திருடும் விக்ரம் அவற்றை அவர்களிடம் சேர்ப்பார் .இப்படியாக கந்தசாமி என்கிற கதாபாத்திரம் உருவாகும் அதை வைத்து கதை செல்லும்.