Latest News
உனக்கு அறிவு இருக்கா.. பாலியல் விவாகாரம் குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி.. கடுப்பான ஜீவா..!
தற்சமயம் தமிழகம் இந்தியா முழுவதுமே பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக கேரளாவில் இருக்கும் பாலியல் சர்ச்சை பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கேரளாவில் பிரபலமான நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதிலிருந்து இந்த பிரச்சனை சூடு பிடிக்க துவங்கியது.
இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு கேரளாவில் இருக்கும் நடிகைகள் பலரும் அச்சம் கொள்ள துவங்கினார்கள் பிறகு இது குறித்த விசாரணை நடத்தப்பட்ட பொழுது கேரளாவில் இருக்கும் பிரபல நடிகர் ஒருவர் தான் இதை செய்தார் என்பது வெட்ட வெளிச்சமானது.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் பினராய் விஜயன் ஆணைக்கு இணங்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா என்பவரின் தலைமையின் கீழ் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் முக்கிய வேலை என்னவென்றால் கேரளா சினிமாவில் இருக்கும் பிரபலங்களை சந்தித்து அவர்களிடம் பாலியல் தொடர்பாக மலையாளத்தில் நடந்த சீண்டல்கள் குறித்த அனுபவங்களை அறிக்கையாக தயார் செய்ய வேண்டும்.
கேரள விவகாரம்:
அந்த வகையில் சில வருடங்களாக ஹேமா கமிட்டி மறைமுகமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மொத்த அறிக்கையும் தயாராக வைத்துள்ளது ஹேமா கமிட்டி. இதில் கேரளாவை சேர்ந்த பல பிரபலங்களின் பெயர்கள் அடிபடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் பேரீச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மற்ற சினிமாக்களும் இதே போல ஒரு கமிட்டியை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்று கூறத் தொடங்கி இருக்கின்றனர். நடிகர் விஷால் கூட தமிழிலும் இப்படி ஒரு கமிட்டியை கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகர் ஜீவாவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது ஜீவா நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று புரியவில்லை என்று திரும்பவும் கேட்டார். பிறகுதான் அவருக்கு பத்திரிகையாளர் கூறுவது என்னவென்று புரிந்தது.
நடிகர் ஜீவா:
அதற்கு பதில் அளித்த ஜீவா சினிமாவும் மோசமாக தான் சென்று கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை கேட்ட பொழுது எனக்கும் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. ஆரம்பத்தில் ஏற்கனவே மீடூ என்கிற ஒரு பிரச்சனை உருவானது.
அதனுடைய இன்னொரு வர்ஷன்தான் இதுவும், எனவே சினிமா முதலில் ஆரோக்கியமானதாக மாற வேண்டும் என்று கூறியிருந்தார் ஜீவா. மேலும் நாம் இந்த விஷயம் தொடர்பாக இப்போது பேச வேண்டாம் நான் வேறு ஒரு விஷயத்துக்காக இங்கு வந்திருக்கிறேன் என்று கூறினார்.
ஆனால் அப்பொழுதும் பத்திரிகையாளர் திரும்பத் திரும்ப அதே கேள்வியை கேட்க அதனால் கோபமான ஜீவா அறிவு இருக்கா என்று கோபத்தில் பத்திரிகையாளர்களை திட்டி விட்டார். இதனால் அங்கு சர்ச்சை நிலவியது அதற்குப் பிறகு ஜீவாவை அழைத்து சென்று இருக்கின்றனர்.