Tamil Cinema News
நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு.. இதுதான் விஷயமா?
தமிழில் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவது போல தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு.
நடிகர் மகேஷ்பாபுவிற்கு என்று தனிப்பட்ட மார்க்கெட் இருந்து வருகிறது. நடிகர் ராம்சரனை விட மகேஷ் பாபுவிற்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது என்று கூறலாம்.
ரசிகர்களுமே அவருக்கு அதிகமாக இருந்து வருகின்றனர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் மகேஷ் பாபு. இந்த நிலையில் அவர் நடித்த ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி விளம்பரத்தால் இப்பொழுது பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
இந்த ரியல் எஸ்டேட் கம்பெனி தற்சமயம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்திடம் 3 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று விளம்பரத்திலும் நடித்துக் கொடுத்திருக்கிறார் மகேஷ் பாபு. எனவே இது மகேஷ்பாபுவை பாதிக்குமா என்று ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகின்றன.
