பிக் பாஸ் வீட்டில் மறைமுகமாக முத்தம் கொடுத்துக்கொண்ட ஜோடிகள் – வைரலாகும் வீடியோ

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதலே மிகவும் சுவாரஸ்யமாக போய்க்கொண்டுள்ளது. ஒரே போட்டியும் சண்டையுமாக போய்க்கொண்டுள்ளது.  தமிழில் துவங்கியது போலவே தெலுங்கிலும் கூட தற்சமயம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது.

ஆனால் தமிழை விடவும் தெலுங்கில் இன்னமும் சுவாரஸ்யமாக போவதாக தகவல். தெலுங்கிலும் கூட தற்சமயம் ஆறாவது சீசன்தான் நடந்துக்கொண்டுள்ளது.

ஆனால் செப்டம்பர் மாதமே துவங்கியதால் தற்சமயம் தெலுங்கு பிக் பாஸில் 21 போட்டியாளர்களில் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியாளர்களில் மெரீனா மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் பழகியதை அடுத்து காதலித்து வருகின்றனர். காதலித்து வரும் காரணத்தால் கேமிரா இருப்பதையும் மறந்து பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்சமயம் அவர்கள் இருவரும் போர்வையை மூடிக்கொண்டு ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்ட காட்சி வைரலாகி வருகிறது.

Refresh