News
தெலுங்கில் ப்ளாப் அடித்த ப்ரின்ஸ் – 4 நாள் வசூல் இவ்வளவுதானா?
சிவகார்த்திகேயன் நடித்து கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் பிரின்ஸ். வரிசையாக டாக்டர், டான் என படங்கள் அனைத்தும் ஹிட் படங்களாக அமைந்ததால் பிரின்ஸ் படத்தின் மீது சிவகார்த்திகேயனுக்கு அதிக நம்பிக்கை இருந்தது.

மேலும் தெலுங்கு ரசிகர்களை டார்கெட் செய்தே பிரின்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. எனவேதான் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கினார்.
இவர் ஏற்கனவே தெலுங்கில் ஒரு ஹிட் படம் கொடுத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் கூட தெலுங்கு தயாரிப்பாளர்தான்.
படம் தமிழில் அதிக வரவேற்பை பெறாததை போலவே தெலுங்கிலும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
கிட்டத்தட்ட 4 நாள் ஓடியும் 4 கோடி ரூபாய்தான் வசூலித்து உள்ளதாம். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு தோல்வியை பிரின்ஸ் படம் அடைந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
