எங்களுக்கு எண்டே கிடையாது – அடுத்த படத்திற்கு தயாராகும் சர்தார் குழு

தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியான திரைப்படங்கள்தான் சர்தார் மற்றும் பிரின்ஸ். பிரின்ஸ் திரைப்படம் நினைத்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஆனால் சர்தார் திரைப்படம் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.

படத்தின் வெற்றியை முன்னிட்டு ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அதில் பேசிய கார்த்தி தனது சினிமா வாழ்க்கையில் சர்தார் மிக முக்கியமான திரைப்படம் என கூறியுள்ளார். கடந்த 5 நாட்களில் மட்டும் படம் 50 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் ஓ.டி.டி ரிலீஸை அமேசான், நெட்ப்ளிக்ஸ் இரண்டிற்குமே விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து சர்தாரின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு கார்த்தி உளவாளியாகவும், ஒரு கார்த்தி போலீஸாகவும் இருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இரண்டாம் பாகத்தில் இரண்டு கார்த்தியுமே உளவாளியாக இருக்க போவதாக கூறப்படுகிறது. நடிகர் கார்த்தியின் படங்களிலேயே 5 நாட்களில் அதிக வசூல் செய்த படமாக சர்தார் உள்ளது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh