News
என்ன கேட்காமலேயே ரிலீஸ் தேதிய சொல்லிட்டாங்க..! – கவலையில் துணிவு இயக்குனர்.
அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும், விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழ் சினிமாவே இதனால் பொங்கலை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இயக்குனர் ஹெச். வினோத் இதுக்குறித்து கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு திரைப்படம் வட இந்தியாவில் நடந்த ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படமாகும்.
இந்த படத்தில் அதிக சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எடிட்டிங் வேலைகள் நிறைய இருப்பதால் அவற்றை மூன்று மாதத்திற்குள் எப்படி முடித்து பொங்கலுக்கு படத்தை வெளியிடுவது என கவலையில் இருக்கிறாராம் ஹெச்.வினோத்.
பொதுவாகவே ஹெச்.வினோத் திரைப்படங்களில் சண்டை காட்சிகள் ஹாலிவுட்டிற்கு இணையாக இருக்கும். தீரன், வலிமை போன்ற படங்களில் அவற்றை நாம் பார்க்க முடியும்.
எனவே பொங்கலுக்கு துணிவு படத்தை வெளியிடுவது இயக்குனருக்கு சற்று கடினமான விஷயமாகவே இருக்க போகிறது என கூறப்படுகிறது.
