Connect with us

நடிகர் கோட்டா சீனிவாசராவ் மறைவு.. வருத்தத்தில் திரையுலகம்..!

Tamil Cinema News

நடிகர் கோட்டா சீனிவாசராவ் மறைவு.. வருத்தத்தில் திரையுலகம்..!

Social Media Bar

தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருந்து வந்தவர் நடிகர் கோட்டா சீனிவாசராவ். தமிழில் அவர் நடித்த சாமி, திருப்பாச்சி மாதிரியான படங்கள் எல்லாம் மிகவும் பிரபலமானவை.

கடந்த சில மாதங்களாகவே இவர் கடுமையான உடல்நிலை குறைப்பாட்டை சந்தித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

அப்போதே இது கோட்டா சீனிவாசராவ் தானா என பலரும் அதிர்ச்சி அடைந்து வந்தனர். அந்த நிலையில்தான் அவரது உடல்நிலை இருந்தது. இந்த நிலையில் 83 வயதான நிலையில் இன்று காலமானார் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.

தெலுங்கு திரையுலகில் அவரது இழப்பு என்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னணி நடிகர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

To Top