தலைவர் 169 படத்தின் கதை, பெயர் வெளியீடு..! – விக்ரமிற்கு ஈடு கொடுக்குமா?

தமிழில் டாப் லெவல் கதாநாயகர்களில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடித்த கபாலி என்கிற திரைப்படம் ஒரு வகையில் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது என கூறலாம்.

அதற்கு பிறகு பல புது இயக்குனர்கள் பெரிய ஹீரோக்களை கொண்டு திரைப்படம் இயக்கினர். தற்போது வந்த விக்ரமை கூட அதற்கு உதாரணமாக கூறலாம்.

தலைவரின் 169 ஆவது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனிற்கு ஏற்கனவே பீஸ்ட் திரைப்படம் பெரிய தோல்வியை ஏற்படுத்திய நிலையில் ரஜினிகாந்த் திரைப்படமாவது நல்ல வெற்றியை கொடுக்குமா? என பலரும் அஞ்சிய நிலையில், படத்தின் கதையை மேம்படுத்த கே.எஸ் ரவிக்குமாரையும் திரைக்கதை குழுவில் இணைத்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் தொடர்பான திரைப்படம் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாஸ்டல் வார்டனாக இருந்தபோதே பேட்ட திரைப்படம் பரபரப்பாக இருந்தது. இதில் ஜெயிலுக்கே வார்டனா? என ரசிகர்கள் வியப்பில் உள்ளனர். 

Refresh