Connect with us

தலைவர் 171 ரஜினிக்கு கடைசி படமா?.. பத்திரிக்கையாளர் கேள்விக்கு லோகேஷ் சொன்ன அதிர்ச்சி பதில்..

Cinema History

தலைவர் 171 ரஜினிக்கு கடைசி படமா?.. பத்திரிக்கையாளர் கேள்விக்கு லோகேஷ் சொன்ன அதிர்ச்சி பதில்..

Social Media Bar

தற்சமயம் வளர்ந்து வரும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தொடர்ந்து இவரது படங்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

தன்னுடைய மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து கமலை வைத்து இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் லியோ திரைப்படமும் திரையரங்கிற்கு வர இருக்கிறது. அதற்கு அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது குறித்து ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

அதன்படி விக்ரம் படத்தின் பாடல் வேலைகள் சென்றுக்கொண்டிருந்தப்போது தான் வைத்திருந்த கதைகளை எதார்த்தமாக அனிரூத்திடம் கூறியுள்ளார் லோகேஷ். அதில் ஒரு கதை அனிரூத்திற்கு பிடித்து போகவே இந்த கதை ரஜினி சாருக்கு நல்லாயிருக்கும். அவர்கிட்ட கூறலாமே என கேட்டுள்ளார்.

ஆனால் ரஜினிக்கு பிடிக்குமா என தெரியவில்லையே என லோகேஷ் தயக்கம் காட்டியுள்ளார். சரி ரஜினியிடம் இதுக்குறித்து பேசலாம் என முடிவு செய்துவிட்டு இருவரும் அவரை நேரில் சந்தித்துள்ளனர். லோகேஷின் கதையை கேட்டதும் ரஜினிக்கு படம் பிடித்துவிட்டது.

ஆனால் அவர் ஏற்கனவே சில இயக்குனர்கள் படத்தில் கமிட் ஆகி இருந்தார். இருந்தாலும் லோகேஷ் கனகராஜ்க்காக அந்த படத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை லோகேஷ் கனகராஜே பகிர்ந்துள்ளதால் அது ரஜினிக்கு இறுதி படம் கிடையாது என்பது தெளிவாகிறது.

To Top