Connect with us

இப்ப அந்த படத்தை பார்த்தாலும் பத்திக்கிட்டு வரும்!.. பிரபுவுடன் நடித்ததால் அப்செட் ஆன நடிகர்!..

thalaivasal-vijay-prabhu

Cinema History

இப்ப அந்த படத்தை பார்த்தாலும் பத்திக்கிட்டு வரும்!.. பிரபுவுடன் நடித்ததால் அப்செட் ஆன நடிகர்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் தந்தையின் செல்வாக்கில் சினிமாவிற்கு வந்து வாய்ப்பை பெற்ற நடிகர்களில் நடிகர் பிரபுவும் ஒருவர். அவர் சினிமாவிற்கு அறிமுகமான புதிதில் சிவாஜி கணேசனின் மகன் என்பாதலேயே அவருக்கு செல்லும் இடம் எங்கும் செல்வாக்குகள் அதிகமாக இருந்தது. ஆனால் தந்தையின் செல்வாக்கில் மட்டுமே சினிமாவில் பெரிய உயரத்தை தொட்டு விட முடியாது அல்லவா.

1982 ஆம் ஆண்டு சங்கிலி என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் பிரபு. அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அதன் பிறகு வாய்ப்புகள் குறைய துவங்கியப்போது அவர் ரஜினிகாந்த் மாதிரியான பெரும் நடிகர்கள் திரைப்படங்களில் அவர்களோடு சேர்ந்து நடிக்க துவங்கினார்.

இந்த நிலையில் பிரபுவோடு சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் தலைவாசல் விஜய் தனது பேட்டியில் கூறியுள்ளார். தலைவாசல் விஜய்யை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என கூறலாம். எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அவரால் அதை சிறப்பாக நடிக்க முடியும். எனவேதான் அவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து கொண்டிருந்தன.

அவருக்கு 32 வயதாக இருந்தப்போது அவருக்கு பெரிய தம்பி என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பெரிய தம்பி திரைப்படத்தை இயக்குனர் சித்ரா லட்சுமணன் இயக்கினார். இந்த திரைப்படத்தில் தலைவாசல் விஜய்க்கு பிரபுவின் அப்பாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பிரபுவிற்கு தலைவாசல் விஜய்யை விடவும் வயது அதிகமாகும். இருந்தாலும் அப்படி நடிக்க சொன்னது அவருக்கு மன வருத்தத்தை ஏறபடுத்தியது. ஆனால் இயக்குனர் அந்த கதாபாத்திரத்திரத்திற்கு இவர்தான் சரியாக இருப்பார் என கூறியதால் அவர் நடித்து கொடுத்துள்ளார்.

To Top