Cinema History
படப்பிடிப்புக்கு வராமல் என்னய்யா பண்ற!.. பாஸ்போட்டை தொலைச்சிட்டு வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட குமரிமுத்து!. அட பாவமே!..
சுந்தர் சிக்கு முன்பே தமிழில் நிறைய காமெடி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்கள் இருந்தார்கள். அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர்தான் இயக்குனர் வி.சேகர். வி.சேகர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் குடும்ப திரைப்படங்களாக இருக்கும்.
ஆனால் அப்படியான கதைக்குள்ளேயே ஒவ்வொரு காட்சிக்கும் காமெடிகளை வைத்திருப்பார். இதனாலேயே அப்போது பிரபல காமெடியன்களாக இருந்த கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சார்லி, என பலரும் அவரது திரைப்படங்களில் நடித்து வந்தனர்.
இந்த நிலையில் அப்போது காமெடி நடிகராக இருந்த குமரி முத்துவிற்கும் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வந்தார் வி.சேகர். பொதுவாக வி.சேகர் திரைப்படத்தில் ஒருவர் கமிட் ஆகிவிட்டால் அந்த படம் முடியும் வரை வேறு படங்களுக்கு அவர்களை அனுப்ப மாட்டார் வி.சேகர்.
குமரிமுத்து செய்த சம்பவம்:
இந்த நிலையில் குமரிமுத்துவிற்கு மலேசியாவில் ஒரு நிகழ்ச்சியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே வி.சேகரிடம் வந்து சார் ஒரு இரண்டு நாள் எனக்கு அனுமதி கொடுங்கள். மலேசியாவில் ஒரு நிகழ்ச்சி உள்ளது. அதை முடித்து கொடுத்தால் எனக்கு நல்ல காசு கிடைக்கும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து யோசித்த வி.சேகர் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்கு நீங்கள் இருக்க வேண்டும் சார் இன்னும் 10 நாட்களில் க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதற்கு முன்பு வந்துவிடுங்கள் என கூறி அனுப்பியுள்ளார்.
குமரிமுத்துவும் மலேசியாவிற்கு சென்று இரண்டு நாட்களில் நிகழ்ச்சியை முடித்தார். ஆனால் அங்கு சென்றவர் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைத்துவிட்டார். இதனால் அவரால் இந்தியாவிற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து 10 நாட்கள் கழித்து க்ளைமேக்ஸ் காட்சிகளை எடுக்க 24 நடிகர்கள் வந்துவிட்ட நிலையில் குமரிமுத்து மட்டும் வரவில்லை. இதனால் படப்பிடிப்பு ரத்தானது. தயாரிப்பாளருக்கு இதனால் 15 லட்ச ரூபாய் நஷ்டமானது. பிறகு வந்த குமரிமுத்து இயக்குனர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு பிறகு வி.சேகர் எந்த ஒரு நடிகரையும் படப்பிடிப்பு முடியும் வரை ஸ்டுடியோவை விட்டே வெளியே விடமாட்டாராம். அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்துவிடுவாராம்.