News
சத்தியம் பண்ணி கொடுங்க.. அப்பதான் கதையை கொடுப்பேன்!.. தயாரிப்பாளரை தவிக்கவிடும் வெங்கட்பிரபு!..
சின்ன சின்ன தயாரிப்பாளர் நிறுவனங்களுக்கு பெரும் கதாநாயகர்களை வைத்து திரைப்படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஏனெனில் பெரும் கதாநாயகர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் தற்சமயம் ஏ.ஜி.எஸ் நிறுவனம் விஜய்யின் 68-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கிட்டதட்ட ஏ.ஜி.எஸ் தன்னிடம் உள்ள முக்கால்வாசி பணத்தை போட்டுதான் இந்த திரைப்படத்தை எடுப்பதாக கூறப்படுகிறது.
எனவே ஒருவேளை இந்த திரைப்படம் வெற்றி அடையவில்லை என்றால் அது ஏ.ஜி.எஸ்ஸிற்கு மிகப்பெரிய தோல்வியாக இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு இன்று ஏ.ஜி.எஸ் நிறுவனம் வெங்கட் பிரபுவிற்காக சமூக வலைதளத்தில் ஒரு ட்விட்டர் போட்டிருந்தனர்.

அதாவது விஜயதசமியை முன்னிட்டு இன்று விஜய் படத்தின் திரைக்கதையை கொடுக்குமாறு கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு நான் திரைக்கதையை கொடுக்கிறேன். ஆனால் நான் கொடுக்கும் திரைக்கதையில் எந்த குறையும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் அப்போது அப்போதுதான் ஆபீசில் திரைக்கதை எங்கு இருக்கிறது என்பதை நான் கூறுவேன் என்று பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்த செய்தி தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.
