Tamil Cinema News
தளபதி 69 திரைப்படத்தின் கதை இதுதான் வெளியான அப்டேட்..!
விஜய் நடித்த திரைப்படங்களிலேயே தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக தளபதி 69 திரைப்படம் இருந்து வருகிறது.
இதுதான் விஜயின் கடைசி திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு ஒன் லாஸ்ட் டைம் என்று பெயர் வைக்க இருப்பதாக பேச்சுகள் இருக்கின்றன. ஆனால் எந்த அளவிற்கு இது உண்மை என்று தெரியவில்லை.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஹெச்.வினோத் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். பொதுவாகவே ஹெச்.வினோத் அவர் இயக்கும் திரைப்படங்களில் நிறைய விஷயங்களை ஆய்வு செய்து பயன்படுத்தி இருப்பார்.
தளபதி 69 கதை:
அந்த வகையில் இந்த திரைப்படத்திலும் பல விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே இந்த திரைப்படம் ஒரு அரசியல் களம் கொண்ட திரைப்படம் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பு படம் குறித்த போஸ்டர் போன்றவை வந்த பொழுது இது அரசியல் குறித்த படமாக இருக்காது என்பது நம்பிக்கையாக இருந்தது.
ஆனால் அரசியலில் நடந்த மிகப்பெரிய ஊழலை சொல்லும் விதமாக தான் இந்த படத்தின் கதைகளம் இருக்கும் என்று கூறப்படுகிறது விஜய் அரசியலுக்கு வருவதால் இந்த படம் அவருக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
