Tamil Cinema News
அருண் பிரசாத் என்னோட க்ரஷ்.. வி.ஜே அர்ச்சனாவிற்கு பதில் வீடியோ போட்ட வர்ஷினி..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதுமே காதல் கதைகள் சுவாரசியமானவை அதனாலேயே அங்கு செல்லும் போட்டியாளர்கள் போலியாகவாவது காதலித்துக் கொள்வது வழக்கமாக இருக்கும்.
பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்தோம் என்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலிக்கும் யாருமே வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு காதலித்துக் கொண்டிருப்பதாக செய்திகளை பார்க்க முடியாது.
இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸை பொருத்தவரை அதில் காதல் கதைகள் என்பதே பெரிதாக இல்லை. மற்ற பிக்பாஸ் அளவிற்கு இந்த வருட பிக் பாஸ் சுவாரசியமாகவும் செல்லவில்லை. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அருண் பிரசாத்.
அருண் பிரசாத்:
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்புகள் பெற்று இந்த முறை பிக் பாஸ் போட்டிக்குள் சென்று இருக்கிறார். போன முறை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக களமிறங்கி பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாறிய விஜே அர்ச்சனாவும் அருண் பிரசாத்தும் காதலித்து வருவது பலருமே அறிந்த விஷயம்.
பிறந்தநாளுக்கு கூட இவர் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வர்ஷினிக்கும் அருண் பிரசாத்துக்கும் இடையே காதல் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தார் போல வர்ஷினியும் அவர் மீது கிரஷ் ஆக இருப்பதாக பேசியிருந்தார்.
மேலும் வர்ஷினி குறித்த பதிவுகளை அவரது ஐடியில் ஷேர் செய்யும் பொழுது அதில் அருண் பிரசாத் என்கிற ஹாஸ்டாகையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இது வி.ஜே அர்ச்சனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது இதனை அறிந்த வர்ஷினி தற்சமயம் எலிமினேட் ஆன நிலையில் அவருக்கு விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறும்பொழுது அருண் பிரசாத்தும் நானும் நண்பர்கள் தான் யாரோ தவறான வதந்திகளை பரப்பி இருக்கிறார்கள். அது இப்பொழுதுதான் எனக்கு தெரிகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.