News
பாலிவுட்டில் பிரபல நடிகருடன் இணையும் தளபதி- யார் அந்த நடிகர்
நடிகர் விஜய் ஒரு பாலிவுட் நடிகருடன் படம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அட்லீயும், தளபதி விஜய்யும் நல்ல காம்போவாக இருந்த ஒரு கூட்டணி ஆகும். விஜய்யை வைத்து அட்லீ தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ், நெல்சன் என ஒதுங்கிவிட்டதால் அட்லீயும் படம் எடுக்க பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இந்நிலையில் விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் அட்லீயுடன் சேரப்போவதாக பேசப்படுகிறது. இதுக்குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அட்லீ தற்சமயம் பாலிவுட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரிச்சையமான நடிகர் ஹாருக்கானை கொண்டு படமெடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஷாருக்கான், அட்லி, நயன்தாரா காம்போ என்றால் கேட்காவா வேண்டும். பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.

தற்சமயம் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹாருக்கான் திரைப்படத்திற்கு தமிழ் மக்களிடையே ஆதரவை திரட்டவே அட்லீ நயன்தாரா மற்றும் விஜய்யை படத்தில் பயன்படுத்துகிறாரா? என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
எப்படி இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
